"நீர்ப்பாலூட்டியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (தானியங்கி: 23 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (*திருத்தம்*)
{{zoology|Image:Bottlenose_Dolphin_KSC04pd0178.jpg}}
 
'''நீர்ப்பாலூட்டியியல்''' என்பது, கடல்வாழ் [[பாலூட்டி]]கள் தொடர்பான ஒரு அறிவியல்துறையாகும். [[திமிங்கிலம்]], [[கடற்பசு]] போன்ற [[சீட்டாசீ]] அறிவியல் வகைப்பாட்டு வரிசையைச் சேர்ந்த ஏறத்தாழ எண்பது வகையான உயிரினங்களைப் பற்றி இத்துறை ஆய்வு செய்கின்றது.
 
நீர்ப்பாலூட்டியியலாளர் அல்லது இத்துறையில் ஈடுபாடு கொண்டோர் இக் கடல்வாழ் பாலூட்டிகளின் [[படிமலர்ச்சி]], [[பரம்பல்]], [[உருவவியல்]], [[நடத்தை]], சமுதாய இயக்கம், மற்றும் இதுபோன்ற விடயங்களைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர்.
 
== வரலாறு ==
[[படிமம்:Orca blubber sampling.jpg‎jpg|left|thumb|250px|ஒரு ஆய்வாளர், கடல்வாழ் பாலூட்டி ஒன்றின்மீது உடற்திசுப் பரிசோதனை அம்பொன்றை எய்கிறார். இந்த அம்பு, விலங்கில் தோலில் சிறு பகுதியை எடுத்துக்கொண்டு விலங்குக்கு எவ்வித தீங்கும் இழைக்காமல் திரும்பிவிடும்.]]
 
செந்நெறிக் காலத்தில் இருந்தே கடல் வாழ் பாலூட்டிகளைக் கவனித்தல் தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. பண்டைக் கிரேக்க [[மீனவர்]]கள், தமது [[வலை]]களில் சிக்கிக்கொள்ளும் கடற்பசுக்களின் முதுகுத் துடுப்பில் செயற்கையாகச் சிறு வெட்டொன்றை ஏற்படுத்துவதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அதனைத் தனியாக அடையாளம் கண்டுகொள்வர்.
 
ஏறத்தாழ 2,300 ஆண்டுகளுக்கு முன்னர், [[அரிசுட்டாட்டில்]], மீனவர்களுடன் கடலில் பயணம் செய்து இந்த நீர்வாழ் பாலூட்டிகள் தொடர்பான குறிப்புக்களை எடுத்துள்ளார். இவரது ''விலங்குகளின் வரலாறு'' என்னும் நூலில், இவர் பாலீன் திமிங்கிலங்களுக்கும், பற்களுள்ள திமிங்கிலங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கவனித்துக் குறித்துள்ளார். இப் பிரிப்பு இன்றைய வகைப்பாட்டியலிலும் பயன்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2020612" இருந்து மீள்விக்கப்பட்டது