"இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
கி்.மு.475-523 காலப்பகுதியில் அரசி ஷீபா சொலமன் மன்னனுக்கு அனுப்பிய பரிசுப் பொருட்களில் இலங்கைக்குரிய விசேட தன்மைகொண்ட உயர்ரக கனிப்பொருட்கள் இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். கி.மு. 4 ம் நூற்றாண்டளவில் தென் மேற்கு ஆசியாவின் பெரும் நிலப்பரப்பை ஆட்சி புரிந்த மாமன்னர் சொலமனுடைய ஆட்சிக்காலத்தில் அரசி ஷீபாவுக்கு இலங்கையின் பெறுமதியான இரத்தினக் கற்களும், முத்துக்களும் அன்பளிப்பாகக் கிடைத்தன என்ற வரலாற்றுச் சம்பவங்கள் சில அரபு நூல்களில் காணக் கிடைக்கின்றன. இது அக்காலப் பகுதியில் இலங்கை அரேபியரிடையே பிரபல்யம் பெற்றிருந்தமையைக் காட்டுகின்றது.<ref>இலங்கை முஸ்லிம்களின் வரலாறு-ஒரு அறிமுகம் (2012), ஸெயின் றவூப், சமூக விஞ்ஞானங்களுக்கான இப்னு கல்தூன் ஆய்வகம், கண்டி, பக்.12 </ref> மாமன்னர் சொலமனுடைய ஆட்சியின் போது எருசலத்திலுள்ள 'பைத்துல் முகத்தஸ்' என்னும் அல்அக்ஸா பள்ளிவாசலில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட சிவப்பு மாணிக்கக்கல் வைத்துக் கட்டப்படதாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன.<ref>அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள்-1992, முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அலுவலகம், கொழும்பு</ref>
[[File:DomeOfTheRock.jpg|thumb|DomeOfTheRock]]
 
இலங்கை முஸ்லிம்கள் சனத்தொகை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் மற்றும் இனரீதியான கணிப்பீடுகள் ஆகியவற்றில் ஆங்கிலத்தில் மூர்ஸ் (Moors) என்றும், சிங்களத்தில் 'யோன' என்றும் தமிழில் 'சோனகர்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சமயம் சார்ந்த தரவுகள் திரட்டப்படும் போது 'இஸ்லாமியர்' அல்லது 'முஸ்லிம்கள்' என்று குறிக்கப்படுவதைக் காணலாம். மூர்ஸ் என்னும் பெயர் போரத்துக்கேயரினால் வைக்கப்பட்ட பெயராகும். ஆனால் புராதன காலத்தில் அரேபியர் 'யவனர்' என்றே அழைக்கப்பட்டனர். யவனர் என்ற சொல் சமஸ்கிருத மொழி என்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். அரேபியர் என்பது பாளி மொழியில் 'யொன்ன' அல்லது 'யோன' என்றும் தமிழில் 'சோனகர்' என்றும் அழைக்கப்பட்டுள்ளது.<ref>தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு, ஏ.கே.றிபாயி. புத்தளம் வரலாறும் மரபுகளும்-1992, ஏ.என்.எம் ஷாஜஹான், பக்.36</ref>
1,214

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2020719" இருந்து மீள்விக்கப்பட்டது