திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றையாக்கம்
சி இற்றையாக்கம்
வரிசை 117:
பெப்ருவரி 13, சனி – மெக்சிகோ நாட்டு அதிபர் இல்லத்தில் வரவேற்பு; அரசியல் தூதர்களுக்கு உரையாற்றினார். அப்போது, “ மெக்சிகோ நாட்டில் ஒருசில வலிமைமிக்கோர் வளர்ந்துகொண்டே போகின்றனர், எண்ணிறந்த மக்கள் வறுமையில் வாடுகின்றனர். போதைப் பொருள் கடத்தல் மலிந்துபோய் இளையோர் வாழ்க்கை சீரழிகின்றது. வன்முறை கோலோச்சுகின்றது. இந்த நிலையை மாற்றியமைக்க நாட்டுத் தலைவர்கள் அயராது உழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். அதுபோலவே, மெக்சிகோ நாட்டின் ஆயர்களை மறைமாவட்ட பெருங்கோவிலில் சந்தித்து உரையாற்றிய போதும், திருத்தந்தை பிரான்சிசு ஆயர்களின் சமூகப் பொறுப்பை வலியுறுத்தி, சமூகத் தீங்குகளைக் கண்டிக்க அவர்கள் துணிச்சலோடு முன்வரவேண்டும் என்று கூறினார். பின்னர் மெக்சிகோவின் பாதுகாவலும், அமெரிக்க கண்டங்களின் பாதுகாவலுமான குவாதலுப்பே அன்னைப் பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினார். குவாதலுப்பே அன்னை மரியாவின் சிறப்புமிகு ஒவியத்தின் முன் சுமார் அரைமணிநேரம் தியானத்தில் மூழ்கியிருந்தார். அவரோடு ஆயர்கள், குருக்கள், பொதுமக்கள் அமைதிகாத்து இறைவேண்டல் செய்தனர்.<ref>[https://www.washingtonpost.com/world/pope-francis-begins-mexico-tour-that-will-likely-address-immigration-and-violence/2016/02/13/663f54ee-cc6d-11e5-b9ab-26591104bb19_story.html மெக்சிகோவில் திருத்தந்தை - முதல்நாள்]</ref>
 
பெப்ருவரி 14, ஞாயிறு – திருத்தந்தை பிரான்சிசு, மெக்சிகோ நகரின் புறப்பகுதிகளுள் ஒன்றான எக்காட்டெப்பெக் (Ecatepec) பகுதிக்குச் சென்று வெளி மைதானத்தில் திருப்பலி நிறைவேற்றினார். அந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் மூன்று இலட்சத்திற்கு மேலான மக்கள் கலந்துகொண்டு இறைவேண்டல் நிகழ்த்தினர். ஏழை மக்கள் நிறைந்த அந்த சேரிப்பகுதிக்குச் சென்று அவர்களுக்கு நம்பிக்கை மிக்கதொரு செய்தியை வழங்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிசு முடிவுசெய்தார். மேலும், சமுதாயத்தின் விளிம்பில் வாழ்வோரைத் தேடிச் செல்வது திருச்சபையின் பொறுப்பு என்ற அடிப்படையில் திருத்தந்தை பிரான்சிசு கருத்தாழம் மிக்கதொரு மறையுரை நிகழ்த்தினார். அப்போது, மெக்சிகோவின் சாபக் கேடாக விளங்குகின்ற போதைப் பொருள் வியாபாரம், கொலை கொள்ளை, ஆட்களைக் கடத்தல், ஊழல் சமுதாயம் போன்ற சீர்கேடுகளுக்கு வழியாகிறது என்றும், ஏழை மக்கள் இந்த அநீதிகளால் ஒடுக்கப்படுகிறார்கள் என்றும் பிரான்சிசு கூறினார். நலமானதொரு சமுதாயத்தை உருவாக்கினால் மெக்சிகோ மக்கள் வேலை தேடி புலம்பெயர வேண்டிய தேவை எழாது என்றும், சமத்துவ சமுதாயம் உருவாக்க மெக்சிகோ அரசும் மக்களும் முனைந்து உழைக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி, இவ்வாறு உண்மையிலேயே கடவுள் விரும்புகின்ற நீதிமிக்க சமுதாயம் ஏற்பட வழியாகும் என்றும் கூறினார். <ref>[http://www.bbc.com/news/world-latin-america-35575820 சமுதாய சீர்திருத்தம் தேவை – திருத்தந்தை பிரான்சிசு உரை]</ref>
பெப்ருவரி 14, ஞாயிறு – எக்காட்டெப்பெக் (Ecatepec) நகருக்குச் சென்று திருப்பலி நிறைவேற்றுகிறார். மெக்சிகோ நகர் வருகிறார். அங்கு, குழந்தைகள் மருத்துவ மனைக்குச் சென்று சந்திக்கிறார். பின்னர், தேசிய கலைக்கூடத்தில் கலைத்துறை வல்லுநர்களை சந்தித்துப் பேசுகிறார்.
 
மாலையில் மெக்சிகோ நகரில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவ மனைக்கு திருத்தந்தை பிரான்சிசு சென்று, அங்கு நோயுற்ற குழந்தைகளையும் அவர்களுடைய பெற்றோரையும் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு ஆசி வழங்கினார். குழந்தைகள், திருத்தந்தை பிரான்சிசுக்கு தாங்கள் வரைந்த படங்கள் கடிதங்கள் போன்றவற்றைப் பரிசாகக் கொடுத்தனர். ஒரு சிறுமி “ஆவே மரியா” என்ற இலத்தீன் பாடலை சூபெர்ட் (Schubert) இசையமைப்பில் இனிமையாகப் பாடி, திருத்தந்தை பிரான்சிசுக்கு மரியாதை செலுத்தினார்.
 
பெப்ருவரி 15, வெள்ளி – துக்லா கித்தியேரெஸ் (Tuxtla Gutierrez) நகருக்குச் செல்கிறார். அங்கிருந்து புனித கிறிஸ்தோபார் தெ லாஸ் காசாஸ் நகருக்குச் செல்கிறார். அங்கு, நகரவை விளையாட்டரங்கத்தில் முதல்குடி மக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றுகிறார், மறையுரை ஆற்றுகிறார். முதல்குடி மக்களின் பிரதிநிதிகளோடும், திருத்தந்தை பயணக்குழுவினரோடும் உணவருந்துகிறார். புனித கிறிஸ்தோபர் தெ லாஸ் காசாஸ் பெருங்கோவிலை சந்திக்கிறார். துக்லா கித்தியேரேஸ் நகர் சென்று குடும்பங்களை சந்திக்கிறார். மெக்சிகோ நகர் செல்கிறார்.