திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4,190 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றையாக்கம்
சி (இற்றையாக்கம்)
சி (இற்றையாக்கம்)
மாலையில் மெக்சிகோ நகரில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவ மனைக்கு திருத்தந்தை பிரான்சிசு சென்று, அங்கு நோயுற்ற குழந்தைகளையும் அவர்களுடைய பெற்றோரையும் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு ஆசி வழங்கினார். குழந்தைகள், திருத்தந்தை பிரான்சிசுக்கு தாங்கள் வரைந்த படங்கள் கடிதங்கள் போன்றவற்றைப் பரிசாகக் கொடுத்தனர். ஒரு சிறுமி “ஆவே மரியா” என்ற இலத்தீன் பாடலை சூபெர்ட் (Schubert) இசையமைப்பில் இனிமையாகப் பாடி, திருத்தந்தை பிரான்சிசுக்கு மரியாதை செலுத்தினார்.
 
 
பெப்ருவரி 15, வெள்ளி – துக்லா கித்தியேரெஸ் (Tuxtla Gutierrez) நகருக்குச் செல்கிறார். அங்கிருந்து புனித கிறிஸ்தோபார் தெ லாஸ் காசாஸ் நகருக்குச் செல்கிறார். அங்கு, நகரவை விளையாட்டரங்கத்தில் முதல்குடி மக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றுகிறார், மறையுரை ஆற்றுகிறார். முதல்குடி மக்களின் பிரதிநிதிகளோடும், திருத்தந்தை பயணக்குழுவினரோடும் உணவருந்துகிறார். புனித கிறிஸ்தோபர் தெ லாஸ் காசாஸ் பெருங்கோவிலை சந்திக்கிறார். துக்லா கித்தியேரேஸ் நகர் சென்று குடும்பங்களை சந்திக்கிறார். மெக்சிகோ நகர் செல்கிறார்.
 
பெப்ருவரி 15, வெள்ளி – திருத்தந்தை பிரான்சிசு, மெக்சிகோ நாட்டின் தென்பகுதியில் உள்ள சாப்பாசு பிரதேசம் சென்றார். அங்கு மெக்சிகோவின் முதல்குடி மக்கள் பெருமளவில் உள்ளனர். அவர்கள் செல்ட்டால் (Tzeltal), சோட்சில் (Tzotzil) போன்ற பழங்கால மொழிகளைப் பேசுகின்றனர். பொருளாதார வளர்ச்சியோ கலாச்சார வளர்ச்சியோ மிகக் குறைவு. போதைப் பொருள் பரிமாற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், குண்டர்கள் நடமாட்டம் போன்ற பல சமூகத் தீமைகள் அப்பகுதியில் நிறைந்துள்ளதால் பெரும்பான்மை மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
 
திருத்தந்தை பிரான்சிசு இத்தகைய பகுதிக்குச் சென்று, முதல்குடி மக்களின் கலாச்சாரத்தை உயர்த்திப் பேசினார். அவர் சான் கிறிஸ்தோபார் தெலாஸ் காசாஸ் என்ற நகரில், நகரவை விளையாட்டரங்கில் திருப்பலி நிறைவேற்றினார். முதல்குடி மக்கள் பெருமளவில் பங்கேற்ற அத்திருப்பலியின்போது முதல்குடி மக்களின் இசை அவர்களது நடனங்கள் இடம்பெற்றன. மக்கள் தங்களது பாரம்பரிய முறை உடைகளை அணிந்துவந்திருந்தனர். சுமார் 25 ஆண்டுகள் கடின உழைப்பின் பலனாக முதல்குடி மக்களின் மொழிகளாகிய செல்ட்டால், சோட்சில் ஆகிய இரு மொழிகளிலும் பெயர்க்கப்பட்ட விவிலிய நூல் படிகள் திருத்தந்தைக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டன.
 
முதல்குடி மக்களின் தலைவர்களோடு திருத்தந்தை உணவு அருந்தினார். பின்னர் மறைமாவட்டப் பெருங்கோவிலுக்குச் சென்று அங்கு முன்னாள் ஆயர் சாமுவேல் ரூயிசு என்பவரின் கல்லறையை சந்தித்து வேண்டல் நிகழ்த்தினார். ஆயர் ரூயிசு, முதல்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அயராது உழைத்தவர். 1994இல் முதல்குடி மக்களின் உரிமைகளைக் கோரி நடந்த “சப்பாட்டா போராட்டம்” (Zapatista Rebellion) தொடர்பாக அரசு அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியதில் ஆயர் ரூயிசு சிறந்த பணியாற்றினார். ஏழைகளின் உரிமைகளைப் பாதுகாக்க திருச்சபையும் அரசும் முன்வர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் திருத்தந்தை பிரான்சிசு, ஆயர் ரூயிசின் கல்லறைக்குச் சென்று வேண்டியது, ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.<ref>[http://www.latimes.com/world/mexico-americas/la-na-pope-mexico-20160215-story.html மெக்சிகோவின் சாப்பாசு பகுதியில் திருத்தந்தை பிரான்சிசு]</ref>
 
பிற்பகலில் திருத்தந்தை பிரான்சிசு, மெக்சிகோ நாட்டுக் குடும்பங்களை சந்தித்து உரையாடி, உரையாற்றினார். ஊனமுற்றோரை சந்தித்து, பரிவோடு அரவணைத்தார்.<ref>[http://en.radiovaticana.va/news/2016/02/15/pope_francis_meets_with_mexican_families/1208919 திருத்தந்தை மெக்சிகோ குடும்பங்களோடு உரையாடல்]</ref>
 
 
பெப்ருவரி 16, செவ்வாய் – மொரேலியா நகர் செல்கிறார். குருக்கள், துறவியர், அர்ப்பணிக்கப்பட்டோர், குருமாணவர்கள் ஆகியோருக்குத் திருப்பலி நிறைவேற்றி உரையாற்றுகிறார். மறைமாவட்டப் பெருங்கோவில் சந்திப்பு. இளையோரை சந்தித்து உரையாற்றுகிறார். மெக்சிகோ நகர் செல்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2022058" இருந்து மீள்விக்கப்பட்டது