திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4,247 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றையாக்கம்
சி (இற்றையாக்கம்)
சி (இற்றையாக்கம்)
 
 
பெப்ருவரி 16, செவ்வாய் – திருத்தந்தை பிரான்சிசு, மெக்சிகோ நாட்டின் மிச்சோக்கான் பிரதேசத்திற்குச் சென்றார். இப்பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரம் அதிகம். போதைப்பொருள் கடத்தல் வழியாகவும் ஆயுத விற்பனை மூலமாகவும் பணம் சம்பாதிக்க முனைகின்ற குண்டர்கள் குழுக்களின் வன்முறையால் ஏழை மக்கள் அவதிப்படுகின்றனர். போதைப்பொருள் வியாபாரத்தைக் கண்டித்த குருக்கள் கொலைசெய்யப்படுவது சாதாரண நிகழ்வு. மிச்சோக்கான் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களது முன்னேற்றத்தில் அரசு அக்கறை காட்டத் தயங்குவதோடு, காவல்துறையும் ஆட்சித்துறையும் குண்டர்களோடு கூட்டு சேர்ந்து ஊழலில் ஈடுபடுவதும் நிலவுகிறது. இப்பின்னணியில் திருத்தந்தை பிரான்சிசு இப்பகுதிக்குச் சென்று மக்களை சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது. வன்முறைக்கும், ஊழலுக்கும் போதைப்பொருள் நடமாட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவோரில் ஒருவர் மொரேலியா நகர் ஆயர் சுவாரசு இண்டா என்பவர். அவரைத் திருத்தந்தை பிரான்சிசு கர்தினால் 2015இல் நிலைக்கு உயர்த்தினார்
பெப்ருவரி 16, செவ்வாய் – மொரேலியா நகர் செல்கிறார். குருக்கள், துறவியர், அர்ப்பணிக்கப்பட்டோர், குருமாணவர்கள் ஆகியோருக்குத் திருப்பலி நிறைவேற்றி உரையாற்றுகிறார். மறைமாவட்டப் பெருங்கோவில் சந்திப்பு. இளையோரை சந்தித்து உரையாற்றுகிறார். மெக்சிகோ நகர் செல்கிறார்.
 
மொரேலியா நகரில் திருத்தந்தை குருக்கள், துறவியர், அர்ப்பணிக்கப்பட்டோர், குருமாணவர்கள் ஆகியோருக்குத் திருப்பலி நிறைவேற்றி உரையாற்றினார். மறையுரையின் போது அவர் சமூக அநீதிகளை எதிர்த்து நின்று, மக்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க திருச்சபைத் தலைவர்கள் துணிச்சலோடு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், அநீதியான சூழ்நிலைகளை மாற்றுவது கடினம் என்று கருதி, செயலிழந்த நிலைக்கு அடிமைகளாகி விடல் ஆகாது என்று வலியுறுத்தினார்.<ref>[http://abc7.com/religion/pope-urges-mexican-priests-not-to-resign-to-status-quo/1202545/ சமூக அநீதிகளை எதிர்க்க அறைகூவல்]</ref>
பின்னர் மறைமாவட்டப் பெருங்கோவில் மக்களை சந்தித்தார். அதைத் தொடர்ந்து மெக்சிகோவின் இளையோரை சந்தித்து உரையாற்றினார். இளையோர் சொகுசு வாழ்க்கை அமைவதற்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க எண்ணுதல் தவறு என்றும், போதைப்பொருள் வியாபரம், கள்ளக்கடத்தல் போன்ற வழிகளில் செல்லாமல் நேர்மையாக உழைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.<ref>[http://www.reuters.com/article/us-pope-mexico-idUSKCN0VP1TJ இளையோருக்கு அறிவுரை]</ref>
 
 
பெப்ருவரி 17, புதன் – குவாரெஸ் நகர் செல்கிறார். அங்கு ஒரு சிறைச்சாலைக்குச் சென்று சந்திப்பு நிகழ்த்துகிறார். தொழிலாளர்களோடு சந்திப்பு. திருப்பலி. உரோமைக்குத் திரும்புகிறார். ((திருத்தந்தையின் மெக்சிகோ பயணம் குறித்த மேலதிகத் தகவல்கள் கீழே)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2022455" இருந்து மீள்விக்கப்பட்டது