செயற்கை நரம்பணுப் பிணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உட்தலைப்பு
வரிசை 5:
 
== செயற்கைக் கற்றலின் அடிப்படை உருவகம் ==
 
உயிரற்ற, மாந்த [[மூளை]] போன்றதோர் உறுப்பெதுவுமில்லாத ஒரு பொறிக்கோ கணிதமாதிரிக்கோ முற்காட்டுதல்களில் இருந்து கற்கும் ஆற்றல் எவ்வழி வருமென்பதை ஒரு சிறு உருவகத்தின் வழியாகப் பார்க்கலாம்.
# [[ஆடுபுலியாட்டம்]] போன்ற ஏதாவதோர் ஆட்டத்தை எடுத்துக்கொள்ளலாம்.
# அவ்விளையாட்டின் ஒவ்வொரு நிலைக்கும் ஒரு பெட்டி என அமைக்கவும்.
# அந்தக்கட்டத்தில் ஆடுபவர் என்னென்ன நகர்வுகளைச்செய்ய முடியுமோ அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நூல்பிடித்து அவை இட்டுச்செல்லும் நிலைகளுக்கான பெட்டியுடன் இணைக்க வேண்டும்.
# ஒவ்வொரு பெட்டியிலும் ஆட்டக்காரர் எத்தனைவிதமான நகர்வுகளை மேற்கொள்ளமுடியுமோ அத்தனை நிறங்களில் குறிப்பில்வழியல்லாமல் பாசிமணிகளைப் போட்டுவைக்க வேண்டும்.
# ஆட்டத்தைத்துவங்கும்போது தொடக்கநிலைக்கான பெட்டியிலிருந்து ஒரு பாசிமணியை எடுத்து அதன்படி நகர்வை மேற்கொள்ள வேண்டும்.
# அதேபோல ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்துக்கான பெட்டியிலிருந்து பாசிமணியை எடுத்து அதன்படி நகர்த்திவரவேண்டும்.
# ஆட்டத்தின் இறுதியில் தோல்வி ஏற்பட்டால் எந்தெந்த பெட்டிகளில் எந்தெந்த பாசிகளை எடுத்தோமோ அவற்றை நீக்கிவிடவேண்டும்.
# வெற்றிபெற்றால் முறையே அந்தந்த நிறத்துப்பாசிமணியொன்றை அந்தந்த பெட்டிகளில் சேர்க்கவேண்டும்.
# பலமுறை இதேபோல விளையாடிவந்தால் அந்தப்பெட்டிகளிலுள்ள பாசிகள் வெற்றியை நோக்கிய நிறவிகிதத்தை அடைந்துவிடும்.
 
மேலேயுள்ள உருவகத்தையொத்து [[செயற்கை நரம்பணு]]க்களை பெட்டிகளாகவும், நூலை இணைப்பாகவும், பாசிநிறவிகிதத்தை கணித்த புள்ளிகளாகவும் கொண்டால் இப்பிணையங்கள் எவ்வாறு இயங்குகின்றன என விளங்கிக்கொள்ளலாம்.
 
[[பகுப்பு:செயற்கை நரம்பணுப் பிணையங்கள்]]
[[பகுப்பு:கணினியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/செயற்கை_நரம்பணுப்_பிணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது