பேச்சிப்பாறை அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Pechiparai Dam, with a scenic view of the Western Ghats.JPG|thumb|பேச்சிப்பாறை அணை]]
'''பேச்சிப்பாறை அணை''' (Pechiparai Reservoir) [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் உள்ள பெரிய அணையாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது.இது மாவட்டத் தலைநகர் [[நாகர்கோவில்|நாகர்கோவிலிலிருந்து]] 43 கிலோமீட்டர் (27 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இவ் அணை [[கோதையாறு|கோதையாற்றின்]] குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1897-1906 காலக்கட்டத்தில் ஐரோப்பிய பொறியாளர் திரு [[மிஞ்சின்]] அவர்களால் அப்போதைய [[திருவிதாங்கூர்]] மகாராசா மூலம் திருநாள் காலத்தில் கட்டப்பட்டது.இதன் அப்போதைய கட்டுமானத்திற்காக செலவளிக்கப்பட்ட தொகை 26.1 லட்சம். இவ்வணை கன்னியாகுமரி மாவட்டத்தின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றது. இவ்வணை [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்]] அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாக இருந்தது. பின்பு 1964-ஆம் ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டிமுடிக்கப்பட்டது. [[கல்குளம்]], அகத்தீசுவரம், தோவாளை மற்றும் ராதாபுரம் ஆகிய வட்டங்கள் இதன் மூலம் பலன் பெறுகின்றன. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் இதனால் பாசன வசதி பெறுகின்றது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 207.19 சதுர கிலோமீட்டர்கள் ஆழம் 14.6 மீட்டர்கள் ( 48 அடி). அணையின் நீளம் 425.5 மீட்டர்கள் உயரம் 120.7 மீட்டர்கள் .
 
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சிப்பாறை_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது