சம்மாந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
அரேபியர்கள் [[இலங்கை]]யில் வர்த்தகர்களாக அறிமுகமாவதற்கு முன்னர் ஆதம் மலையை (Adams Peak) தரிசிக்க வருகின்ற யாத்திரிகர்களாகவே அறியப்பட்டனர். அப்படி வந்தவர்கள் இங்குள்ள வாசனைத்திரவியங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உள்ளதை அறிந்தனர். அதனால் பின்னாட்களில் அவர்களின் வருகை வர்த்தக நோக்கத்தைக் கொண்டதாக அமைந்தது. [[அரேபியர்]] [[மத்தியதரைக்கடல்]] மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கூடாகச் செய்து வந்த வர்த்தகமும் அவர்களுக்குப் பரிச்சயமான வர்த்தகப் பாதைகளும் இந்தியாவினதும், இலங்கையினதும் அறிமுகத்தைக் கொடுத்தன. அவர்கள் காற்று வீசும் காலத்திற்கேற்ப [[வங்காள விரிகுடா]]வினூடாக இலங்கையின் கிழக்குக் கரையை அடைந்தனர். ''(அரேபியரின் முதல் பிரவேசம் இலங்கையின் எப்பகுதியில் இடம் பெற்றது என்பதில் வரலாற்று ஆசிரியளுக்கிடையில் கருத்து முரண்பாடு நிலவுகிறது.)'' இவர்கள் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்று வீசும் காலங்களில் கட்டுமரக் கப்பல்கள் (பாய்க்கப்பல்), 'சம்பன்' எனப்படும் ஒருவகை வள்ளம், சிறிய படகுகள் ஆகியவை மூலம் வங்காள வரிகுடாவின் ஊடாகப் பயணித்து இலங்கையின் கிழக்குக் கரையை அடைந்து, மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கின் சம்மாந்துறை வரையும் இயற்கையாக விரிந்து சென்ற வாவியினூடாகச் சென்று வாவியின் தென்திசையில் அமைந்திருந்த சம்பன்துறையில் தரைதட்டி, அங்கு வள்ளங்களைக் கட்டிவிட்டு தரைமார்க்கமாகச் சென்று ஆதம் மலையைத் தரிசித்தனர்.<ref>தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு (2001), மருதூர் ஏ மஜீத், மருதூர் வெளியீட்டுப் பணியகம், பக்.22</ref>
 
அரேபியரும் பாரசீகரும் துலுக்கர்களும் பட்டாணியர்களும் தென்கிழக்கில் மட்டக்களப்பு வாவி அல்லது ஆற்றின் உதவிகொண்டு வந்திருக்கின்றனர் என்பதற்கு 12 ம் நூற்றாண்டளவின்நூற்றாண்டளவில் குறிப்புகளானஎழுதப்பட்டிருக்கும் அல்-இத்ரீசி, அல்-பூர்பானி, அபூசெய்யது என்னும் புகழ் பெற்ற அரேபிய புவியியலாளர்களின் குறிப்புக்கள் சான்றுகளாக உள்ளன.<ref>அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், கலாசார சமய அலுவல்கள் அமைச்சு (1997) 24, மலே வீதி, கொழும்பு-02, பக்.09</ref> அண்மைக்காலம் வரை தென்கிழக்கு மட்டக்களப்பு என்றே அழைக்கப்பட்டு வந்தது.
 
அரேபியக் கடலோடியான சிந்துபாத் இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் "இலங்கையில் நான் தரையிறங்கிய போது ஒருவர் வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவர் என்னுடன் அரபு மொழியில் மிகச் சரளமாக உரையாடினார். இங்கு வாழ்ந்த மக்கள் மஃபார் என்று அழைக்கப்பட்டனர்." இந்தச் அரபிமெரழிச் சொல்லுக்கு தோணித்துறை என்பது பொருளாகும். இந்த மஃபார் என்ற சொல்லே திரிபடைந்து [[மட்டக்களப்பு]] என்றும் திரிபடைந்திருக்கலாம் என்றுவரலாற்றாசிரியர்கள்என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.<ref>மத்தியகிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை (1995) மருதூர் ஏ மஜீத்</ref>
 
மட்டக்களப்பு என்னும் பெயர்ப்பதம் தென்கிழக்கிலுள்ள சம்மாந்துறைச் சார்ந்துள்ள களப்பகுதியையே நீண்ட காலமாக குறித்து வந்திருக்கிறது. சம்மாந்துறைக்கு அண்மித்த மட்டக்களப்பு போர்த்துக்கேயர் காலத்துக்கு முன்பிருந்தே மிகப் பிரசித்தி பெற்ற கப்பல் கட்டும் இடமாகவும், வர்த்தகத் துறைமுகமாகவும் இருந்து வந்துள்ளது. போர்த்துக்கேயர் 1628 ம் ஆண்டு புளியந்தீவில் தமது கோட்டையைக் கட்டியதன் பின்பே, மட்டக்களப்பு என்னும் பெயர்ப்பதம் சம்மாந்துறைக்கு இருபது மைல் தூரம் வடக்கே இருந்த பிரதேசத்தைக் குறிப்பதாக மாறியது.
 
=== குடி வரலாறு ===
"https://ta.wikipedia.org/wiki/சம்மாந்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது