சம்மாந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
அரேபியக் கடலோடியான சிந்துபாத் இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் "இலங்கையில் நான் தரையிறங்கிய போது ஒருவர் வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவர் என்னுடன் அரபு மொழியில் மிகச் சரளமாக உரையாடினார். இங்கு வாழ்ந்த மக்கள் மஃபார் என்று அழைக்கப்பட்டனர்." இந்தச் அரபிமெரழிச் சொல்லுக்கு தோணித்துறை என்பது பொருளாகும். இந்த மஃபார் என்ற சொல்லே திரிபடைந்து [[மட்டக்களப்பு]] என்றும் திரிபடைந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.<ref>மத்தியகிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை (1995) மருதூர் ஏ மஜீத்</ref>
 
மட்டக்களப்பு என்னும் பெயர்ப்பதம் தென்கிழக்கிலுள்ள சம்மாந்துறைச் சார்ந்துள்ள களப்பகுதியையே நீண்ட காலமாக குறித்து வந்திருக்கிறது. சம்மாந்துறைக்கு அண்மித்த மட்டக்களப்பு போர்த்துக்கேயர் காலத்துக்கு முன்பிருந்தே மிகப் பிரசித்தி பெற்ற கப்பல் கட்டும் இடமாகவும், வர்த்தகத் துறைமுகமாகவும் இருந்து வந்துள்ளது. போர்த்துக்கேயர் 1628 ம் ஆண்டு புளியந்தீவில் தமது கோட்டையைக் கட்டியதன் பின்பே, மட்டக்களப்பு என்னும் பெயர்ப்பதம் சம்மாந்துறைக்கு இருபது மைல் தூரம் வடக்கே இருந்த பிரதேசத்தைக் குறிப்பதாக மாறியது.<ref>அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், கலாசார சமய அலுவல்கள் அமைச்சு (1997) 24, மலே வீதி, கொழும்பு-02, பக்.04</ref>
 
=== குடி வரலாறு ===
"https://ta.wikipedia.org/wiki/சம்மாந்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது