"சம்மாந்துறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,329 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
மட்டக்களப்பு என்னும் பெயர்ப்பதம் தென்கிழக்கிலுள்ள சம்மாந்துறைச் சார்ந்துள்ள களப்பகுதியையே நீண்ட காலமாக குறித்து வந்திருக்கிறது. சம்மாந்துறைக்கு அண்மித்த மட்டக்களப்பு போர்த்துக்கேயர் காலத்துக்கு முன்பிருந்தே மிகப் பிரசித்தி பெற்ற கப்பல் கட்டும் இடமாகவும், வர்த்தகத் துறைமுகமாகவும் இருந்து வந்துள்ளது. போர்த்துக்கேயர் 1628 ம் ஆண்டு புளியந்தீவில் தமது கோட்டையைக் கட்டியதன் பின்பே, மட்டக்களப்பு என்னும் பெயர்ப்பதம் சம்மாந்துறைக்கு இருபது மைல் தூரம் வடக்கே இருந்த பிரதேசத்தைக் குறிப்பதாக மாறியது.<ref>அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், கலாசார சமய அலுவல்கள் அமைச்சு (1997) 24, மலே வீதி, கொழும்பு-02, பக்.04</ref>
 
மட்டக்களப்பு வாவியின் தென்கோடிக்கப்பால் உள்ள பகுதியே ஒல்லாந்தர் காலம் வரைக்கும் மட்டக்களப்பு என்னும் பெயரால் அழைக்கப்பட்டதென்றும், ஒல்லாந்தர் தமது கப்பற் பிரயாண வசதிக்கேற்றதாக வாவியின் வடக்கேயுள்ள கடல் வாயினைத் தெரிந்து, அவ்விடத்திலிருந்த புளியந்தீவிலே கோட்டையினை அமைத்த பின்னரே மட்டக்களப்பென்ற பெயர் வாவியின் வடபகுதிக்கும் சென்றதென்று அறிகிறோம். இலங்கையின் சிறப்பைக் கேள்வியுற்று வடஇந்தியாவிலிருந்து திரண்டு வந்த முற்குகர் கூட்டத்தினர், ஈழத்தின் கிழக்குக் கடல் வழியாக வந்து உப்புநீர் ஏரியொன்றின் ஊடாக நாட்டினுள் புகுந்து தமது ஓடங்களைச் செலுத்தினர் என்றும், தெற்கு நோக்கி நீண்ட தூரம் சென்ற அவரகளது ஓடங்கள் தரைதட்டியதும் அவ்வேரியின் எல்லைக்குத் தாம் வந்து விட்டதை அறிந்து அப்பகுதிக்கு மட்டக்களப்பு (களப்புமட்டம் - வாவியின் எல்லை) என்று பெயரிட்டனர் என்றும் வழங்குகின்ற கேள்ளிச்கேள்விச் செய்தி இக் கருத்தையே வலியுறுத்துவதாகும்.<ref>மட்டக்களப்புத் தமிழகம், இரண்டாம் பதிப்பு, (2002), வி.சி.கந்தையா, ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி, யாழ்ப்பாணம், பக்.391-392</ref>
 
15 ஆம் நூற்றாண்டு வரையும் வாவியின் தென்பகுதியே மட்டக்களப்பு எனப் பெயர் பெற்றிருந்த வரலாற்றை வீரமுனைச் செப்பேடு, சீர்பாதர்வரன்முறைக் கல்வெட்டு, கண்ணகி வழக்குரை காதை என்பன குறித்துள்ளன.<ref>வரலாற்றில் வாழும் சம்மாந்துறை(2004), எஸ்.அப்துல் றாஸிக், சம்மாந்துறை செந்நெல் கிராமம் குடிநீர் விநியோகத்திட்ட அங்குரார்ப்பண மலர், பக்.1</ref>
 
மட்டக்களப்பின் துறையாக சம்மாந்துறையே விளங்கியது. சம்மாந்துறை என்ற பெயர் 'ஹம்பன்' என்னும் சுமேரிய மொழிச் சொல்லின் திரிபாகும். அதன் பொருள் 'கப்பல் கட்டுமிடம்' என்பதாகும்.
 
=== குடி வரலாறு ===
1,214

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2028540" இருந்து மீள்விக்கப்பட்டது