பதின்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம் |
|||
வரிசை 9:
== பதின்மக் குறியீட்டு முறைகள் ==
உலகில் பல்வேறு பதின்மக் குறியீட்டு முறைகள் உள்ளன. இவற்றுட் சில இன்னும் வழக்கில் உள்ளன. சில அதிகம் பயன்பாட்டில் இல்லை அல்லது வழக்கொழிந்து விட்டன. [[கிரேக்க எண்கள்]], [[
இந்திய-அரபு எண்முறையில், பதின்மக் குறியீடு என்பது, மேற்காட்டியவாறான பதின்ம எண்ணீட்டை (numeration) மட்டும் குறிக்காமல், பதின்மப் [[பின்னம்|பின்னங்களையும்]] சேர்த்து இடஞ்சார் முறைமூலம் குறிக்கப்படுகின்றது. இடஞ்சார் பதின்ம முறையில், [[சுழியம்]] உட்படப் பத்துப் பெறுமானங்களைக் (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என்பன) கொண்ட குறியீடுகள் பயன்படுகின்றன. இக்குறியீடுகள் [[இலக்கம்|இலக்கங்கள்]] எனப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி, எந்தவொரு எண்ணையும் எழுத முடியும். எண் எவ்வளவு பெரியது அல்லது எவ்வளவு சிறியது என்பது ஒரு பொருட்டல்ல. பின்னப் பகுதிகளைக் கொண்ட எண்களை எழுதும்போது, இவ்விலக்கங்கள் [[பதின்மப் பிரிப்பான்|பதின்மப் பிரிப்பானுடன்]] பயன்படுகின்றன. இப்பதின்மப் பிரிப்பான் முழுஎண் முடிந்து பின்னப் பகுதி தொடங்கும் இடத்தைக் குறிக்கப் பயன்படுகிறது. பெரும்பாலும் ஒரு புள்ளியே பதின்மப் பிரிப்பானாகப் பயன்படுகிறது. சில நாடுகளில் பதின்மப் பிரிப்பானாக ஒரு காற்பிள்ளியைப் பயன்படுத்துவதும் உண்டு. இதோடு [[கூட்டல் குறி]] (+), [[கழித்தல் குறி]] (-) ஆகியவையும், எண்ணுக்கு முன்னால் பயன்படுவது உண்டு. கூட்டல் குறி எண் சுழியத்திலும் பெரிது ([[நேர் எண்]]) என்பதையும், கழித்தல் குறி, எண் சுழியத்திலும் சிறியது ([[எதிர் எண்]]) என்பதையும் குறிக்கின்றன.
|