சம்மாந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 55:
இலங்கையில் இப்போதும் சம்மன்காரர்கள் என்று அழைக்கப்படும் மக்கள் இருக்கின்றனர். இவர்களை சிங்களவர்கள் 'ஹம்பாங்காரயா' என்று அழைக்கின்றனர். ஹம்பாந்தோட்டை என்னும் ஊரும், சம்மாந்துறை என்னும் ஊரும் இலங்கையின் தென்பகுதியில் நிலரீதியாகத் தொடர்புபட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கொழும்பில் ஆதியில் முஸ்லிம்கள் வாழ்ந்த இடம் சம்மான்கோட்டை என்று அழைக்கப்பட்டு வருகிறது. அங்கு அமைந்திருக்கும் அழகிய பள்ளிவாசல் 'சம்மான்கோட்டைப் பள்ளி' என்றும் அழைக்கப்படுகிறது.<ref>சோனகத்தேசம்-மிகச் சுருக்கமான அறிமுகம், ஏ.பி.எம்.இத்ரீஸ், பக்.105</ref>
 
காசியப்ப மன்னன் இலங்கையின் வடக்கில் வல்லிபுரம், கிழக்கில் சம்மாந்துறை, மேற்கில் களனி போள்ற இடங்களில் இருந்த துறைமுகங்களைத் தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தான் என அறியமுடிகிறது. சம்மாந்துறை கப்பல் கட்டும் துறைமுகமாகத் திகழ்ந்தது என சேர் எமெர்சன் டெனன்ட் குறிப்பிட்டிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கதாக உள்ளது. இன்றும் கூட சம்மாந்துறையில் இரண்டு கிராமசேவகர் பிரிவுகள் மட்டக்களப்புத் தரவை-01, மட்டக்களப்புத் தரவை-02 என்று அழைக்கப்படுகின்றமை இதற்குச் சிறந்த ஆதாரமாகும். சம்மாந்துறை பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம், தபால் நிலையம், மாவட்ட வைத்தியசாலை ஆகியன மட்டக்களப்புத் தரவையிலேதான் அமைந்துள்ளன. மட்டக்களப்புத் தரவை, முக்குவர் வட்டை ஆகிய பிரதேசங்களைத் தாண்டி சம்மாந்துறையின் அல்லை களப்புப் பகுதியை நோக்கிச் செல்லும் போது அங்கு சேறடர்ந்த களப்பகுதி காணப்படுகிறது. இது மட்டக்களப்பு வாவியுடன் இணையும் பகுதியாகவும் உள்ளது. அல்லை சதுப்பு நிலப்பகுதியும் அதனை அண்டிய சேவகப்பற்று வயற்காணிகளும் முன்னர் நிலப்பரப்பாகவே இருந்தன. பின்னர் காலப்போக்கில் வண்டல் மணலால் மூடப்பட்டுள்ளன. இந்த வயற்காணிகளில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தற்போதும் வழமையாகக் காணப்படுகிறது. இன்று சம்மாந்துறை தூர்ந்துபோன, கைவிடப்பட்ட துறைமுகமாக இருப்பதற்கு அந்நிய ஆக்கிரமிப்புகளும் ஒரு காரணமாகும். அத்துடன் இது நேரடியாகக் கடலுடன் சேராத களப்புசார் துறையாகக் காணப்பட்டதையும் குறிப்பிடலாம். முதியோர்களின் வாய்வழித் தகவல்களின்படி, சம்மாந்துறையையும் காரைதீவையும் ஒரு காலத்தில் களப்பில் சேரும் நீர் பிரித்திருந்ததாகவும், மாவடிப்பள்ளி வரையிலும் தரைவழித் தொடர்பு இருந்ததாகவும், அதற்கப்பால் காரைதீவை அடைய ஓடங்களைப் பயன்படுத்தியதாகவும் அறிய முடிகிறது.<ref>சம்மாந்துறை பயர்பெயர் வரலாறு, எம்.ஐ.எம்.சாக்கீர் (2012) வாழும் கலை இலக்கிய வட்டம், பக்.43-44</ref>
 
சம்மாந்துறை கப்பல் கட்டும் துறைமுகமாகவும், பழுதுபார்க்கும் இடமாவும் விளங்கியதனால், ஆதம் மலையைத் தரிசித்து விட்டுத் திரும்பியவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்றை எதிர்பார்த்து சம்மாந்துறையை அண்மித்த பகுதிகளில் அல்லது இறங்குதுறையாகவும், பொருள்களைப் பாதுகாத்து வைக்கும் விளங்கிய கிட்டங்கி, பட்டினமாகத் திகழ்ந்த மண்டூர் ஆகிய இடங்களில் தங்கியிருந்தனர் எனத் தெரிய வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சம்மாந்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது