அசுடெக் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நூற்கோவை: *திருத்தம்*
வரிசை 79:
அசுகபோட்சால்கோ நகர அரசுக்கும் அதன் முன்னாள் மாகாணங்களுக்கும் இடையே எழுந்த உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்ற கூட்டத்தால் இந்தக் கூட்டணி நிறுவப்பட்டது. <ref name="Smith2009">Smith 2009</ref>தன்னாட்சியுடைய மூன்று நகர அரசுகளின் கூட்டணியாக துவக்கத்தில் திட்டமிடப்பட்டபோதும் டெனோச்டீட்லான் முதன்மையான படைத்துறை கூட்டாளியாக விளங்கியது.<ref name="Hassig 1988">Hassig 1988</ref> 1520இல் எசுப்பானியர்கள் வந்தடைந்தபோது, கூட்டணியின் நிலப்பகுதியை டெனோச்டீட்லான் தான் செயற்பாட்டளவில் ஆண்டு வந்தது; மற்றக் கூட்டாளிகள் துணைப்பொறுப்புகளையே வகித்தனர்.
 
[[File:Basin of Mexico 1519 map-en.svg|thumb|left|[[அசுடெக் பேரரசை எசுப்பானியர் கைப்பற்றுதல்|எசுப்பானியக் கைப்பற்றுகை]] நேரத்தில் [[மெக்சிக்கோ பள்ளத்தாக்கு]].]]
இக்கூட்டணி உருவான பின்னர் கைப்பற்றும் வண்ணம் பல போர்களை நடத்தி தனது ஆட்பகுதிகளை விரிவாக்கியது. உச்சத்தில் இருந்தபோது பெரும்பாலான [[மெக்சிக்கோ|மத்திய மெக்சிக்கோவை]] ஆண்டு வந்தது; தொலைவில் இருந்த தற்கால [[குவாத்தமாலா]]வின் எல்லையிலிருந்த, [[இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி]]யான சோகோனோச்கோ மாகாணத்தையும் தன்னாட்சியில் கொண்டு வந்தது. இந்த ஆட்சியை வரலாற்றாசிரியர்கள் "தலைமையேற்பு" அல்லது "மறைமுக" ஆட்சியாக விவரிக்கின்றனர்.<ref name="Smith2001">Smith 2001</ref> கூட்டணிக்கு அரையாண்டுக்கொருமுறை [[திறை]] செலுத்தவும் அசுடெக் பேரரசுக்குத் தேவைப்பட்டபோது படைகளை அனுப்பவும் உடன்பட்டால், கைப்பற்றப்பட்ட நகரங்களின் ஆட்சியாளர்கள் அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். இதற்கு மாற்றாக, கூட்டணி அரசு பாதுகாப்பையும் அரசியல் நிலைத்தன்மையையும் அளித்தது. இந்த அரசியலமைப்பு பரந்த நிலப்பகுதியில் பொருளியல் ஒத்துழைப்பிற்கு வழிவகுத்த அதேசமயம் குறிப்பிடத்தக்க உள்ளூர் தன்னாட்சியை வழங்கியது.
 
இந்தப் பேரரசின் சமயக் கொள்கை [[பல கடவுட் கொள்கை]]யைத் தழுவியது. மெக்சிகா அசுடெக்கின் போர்க்கடவுள் ''உய்ட்சிலோபோச்ட்லி''யை முதன்மை கடவுளாக வழிபட்டனர். கைப்பற்றபட்ட நகர அரசுகளிலும் அவர்களது கடவுள்களை வணங்க சுதந்திரம் வழங்கப்பட்டது; அவர்களது கடவுள்களுடன் உய்ட்சிலோபோச்ட்லியும் சேர்க்கப்பட வற்புறுத்தப்பட்டனர்.
 
[[File:Basin of Mexico 1519 map-en.svg|thumb|left|[[அசுடெக் பேரரசை எசுப்பானியர் கைப்பற்றுதல்|எசுப்பானியக் கைப்பற்றுகை]] நேரத்தில் [[மெக்சிக்கோ பள்ளத்தாக்கு]].]]
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அசுடெக்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது