கேழ்வரகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 1:
{{taxobox
|name = ''கேழ்வரகு''
|image = Finger_millet_grains_of_mixed_colorFinger millet grains of mixed color.jpg
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரங்கள்]]
வரிசை 13:
|}}
 
'''கேழ்வரகு''' (இலங்கை வழக்கு: '''குரக்கன்''', ''Finger millet'', ''Eleusine coracana'') ஆண்டுக்கொரு முறை விளையும் தானியப் பயிர் ஆகும். இதன் வேறு பெயர்கள் ''ஆரியம்'',<ref>[http://ta.wiktionary.org/s/42td ஆரியம் - விக்சனரி]</ref> ''ராகி'' மற்றும் ''கேப்பை''. [[எத்தியோப்பியா]]வின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் [[இந்தியா]]வில் அறிமுகப்படுத்தப் பட்டது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். இது தவிர ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களிலும் ராகி சாகுபடி செய்யப்படுகிறது.
 
இந்தியாவின் பழங்கால மனிதர்கள் காட்டு வகையான எல்லூசின் இண்டிகாவில் இருந்து, பயிர் செய்யக் கூடிய எல்லூசின் கோரகானா வகையை தோன்ற வைத்துள்ளனர். ஆரியர்கள் இந்தியாவிற்கு வரும் முன்னரே, ராகி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ராகி முதலில் இந்தியாவில் தோன்றி, பின்னர் அரேபியாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் சென்றடைந்துவிட்டதாகவும் டிகண்டோல்(1886) கூறுகிறார். தென்னிந்தியாவில் இது அதிகம் பயிர் செய்யப்படுவதால், இவ்விடம் முதல் நிலைத் தோற்ற இடமாக இருக்கக் கூடும் என்கிறார். எனினும், ராகி ஆபிசீனியாவில் (எத்தியோப்பியா) தோன்றியிருக்கும் என்கிறார் வாவிலோ(1951). கேழ்வரகு முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி பின்னர் சோபியன் வழியாக இந்தியாவை சென்றடைந்திருக்கும் என்று மெஹ்ரா(1963), கூறுகிறார். எல்லூசின் கோரகானாவின் முந்தைய தலைமுறை எல்லூசின் இண்டிகா என்று கருதப்படுகிறது.
 
ராகி வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக பயிர் செய்யப்படுவதோடு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேசம் மற்றும் ஹிமாச்சலபிரதேசம் மலை பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.
 
== மருத்துவ பயன்கள் ==
 
* ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.
* கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
* தாவர வகை இரசாயன கலவைகள் (Phytochemical Compounds) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
* லெசித்தின் (Lecithin) மற்றும் மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் (Amino acids), கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்கிறது.
* இரும்புச்சத்து ரத்தசோகையை குணப்படுத்துகிறது.
* உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
* குடலுக்கு வலிமை அளிக்கும்.
* உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.
வரிசை 34:
கேழ்வரகு பயிரை ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பயிராக இருப்பதால், மலைச்சரிவுகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் வெற்றிகரமாக சாகுபடி செய்யலாம். கடின வகைப் பயிர் என்பதால் மானாவாரி மற்றும் தமிழ்நாட்டின் பாசனப் பயிர் என இருமுறையிலும் பயிர் செய்யலாம். ராகி பயிருக்கு அதிக மழை நல்லதல்ல. கதிர் முதிரும் போது மழையிருக்கக் கூடாது. நல்ல வடிகால் வசதியுடைய, போதுமான அளவு நீர் தேக்கத் தன்மையுடைய, வண்டல் மண், ராகி சாகுபடிக்கு ஏற்றது. சிறிதளவு நீர் தேக்கத்தையும் கூட தாங்கும் தன்மை பெறுவதற்கு போதுமான அளவு வடிகால் வசதியுடைய களிமண்ணிலும் ராகி சாகுபடி செய்யலாம்.
 
== இவற்றையும் பார்க்க ==
== சமையல் குறிப்பு ==
* [[கேழ்வரகு அடை]]
* [[கூழ்]]
* [[கேழ்வரகுக் களி]]
* [[குரக்கன் பிட்டு]]
 
== உசாத்துணை ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கேழ்வரகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது