நெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:US long grain rice.jpg|thumb|நன்கு வளர்ந்த நெற் பயிர்]]
'''நெற் பயிர்''' அல்லது '''அரிசி''' (''rice'') என்பது [[புல்]] வகையை சேர்ந்த ஒரு [[தாவரம்|தாவரமாகும்]]. இது [[தென்கிழக்காசியா]]வில் தோன்றியது. இது ஈரநிலங்களில் வளரக்கூடியது. நெற்பயிர் சராசரியாக ஐந்து [[மாதம்|மாதங்கள்]] வரை வளரக் கூடிய ஓர் [[ஆண்டுத் தாவரம்|ஆண்டுத் தாவரமாகும்]]. இப்பயிரின் [[வித்து|விதையின்]] உமி என அழைக்கப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின் [[உணவு|உணவாகப்]] பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு மேலுறை நீக்கப்பட்ட விதை '''அரிசி''' என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு [[முளைத்தல்|முளைக்கும்]] திறன் கிடையாது. நெல், [[சோளம்]], [[கோதுமை|கோதுமைக்கு]]க்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் [[தானியம்]] ஆகும்.
 
== வரலாறு ==
வரிசை 11:
[[இந்தியா]]வில், [[ஔவையார்]] மற்றும் பல பழம்பெரும் புலவர்கள் பாடிய நெல் மற்றும் அரிசி பற்றிய பாடல்கள் பல உள்ளன. நெல் விளையும் பகுதிகளில், நெல் நடுதல், அறுவடை போன்ற காலத்தையொட்டி பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. நெல் பற்றிய சில [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] குறிப்புகளும் உள்ளன. [[சீனா]]வில், விவசாயம், நெல் ஆகிய இரண்டையும் குறிக்கும் சொல் ஒன்றே (XXX) ஆகும்.
 
[[ஆப்பிரிக்கா]]வில் நெல் சுமார் கி.மு 1500 முதல் பயிரிடப்பட்டு வருகிறது. கி.மு 1500 - 800 ஆம் ஆண்டுகளில், நைகர் நதித்துவாரத்தில் பயிரிடப்பட்டு, பின் [[செனெகல்]] நாடு வரை பரவியது. எனினும், இதன் சாகுபடி மேற்கொண்டு பரவவில்லை. அரேபியர்களால் கி.பி 7 - 11 ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிய நெல் இனங்கள் பயிரிடப்பட்டன.
 
[[ஜப்பான்|ஜப்பானில்]] நெற்பயிர் சீனாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது என ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால், ஜப்பானியர்கள் முன்னாளில் நீளமான தண்டுடைய, நீரில் வளரும் நெற்பயிர்களை படகில் சென்று அறுவடை செய்ததாக சில குறிப்புகளும் உள்ளன. உலர்நில (மானாவாரி) நெல் சாகுபடி கி.மு 1000 ஆம் ஆண்டு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னாளில், கி.மு 300 இல் தற்கால நீர்நில சாகுபடி முறை யாயோய் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
ஆசிய நெல் இனம் மத்திய கிழக்கு நாடுகளிலும் மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் சுமார் கி.மு 800 இல் பயிரிடத் துவங்கப்பட்டது. மவுரியர்கள் நெற்பயிரை [[ஸ்பெயின்]] நாட்டுக்கு அறிமுகப்படுத்தினர். 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல் [[இத்தாலி]], [[பிரான்ஸ்]] நாடுகளுக்கும் பின்னர் எல்லா கண்டங்களுக்கும் பரவியது. 1694இல் [[அமெரிக்கா]]வின் தென் கரோலினா மாகாணத்தில், மடகாஸ்கரிலிருந்து நெல் அறிமுகமானது. புயலால் பாதிப்படைந்து 'சார்ல்ஸ்டன்' என்ற துறைமுகத்துக்கு வந்த கப்பலின் தலைவர் ஒரு நெல் மூட்டையை அங்குள்ள விவசாயிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அவர்கள் அதனை பயிரிடத் தொடங்கினர். தென் அமெரிக்காவில் நெல் 18ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
[[Fileபடிமம்:Mudachikkadu24.JPG|thumb|பரிச்சல் நிலையில் உள்ள நெற்பயிர்கள்]]
முந்தைய அமெரிக்காவின் தென் கரோலினா, ஜார்ஜியா மாகாணங்கள், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட கறுப்பின அடிமைகள் மூலம் நெல் பயிர் செய்து மிக அதிக இலாபம் ஈட்டினர். இவ்வடிமைகளுக்கு முன்னமே நெல் பயிர் பற்றிய அறிவு இருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டனர். நில முதலாளிகள் அடிமைகளிடமிருந்து பாத்தி கட்டுதல், நீர் தேக்குதல் போன்ற உத்திகளை தெரிந்து கொண்டனர். முதலில் அமெரிக்காவில், நெல் கையால் (மர உலக்கை கொண்டு) குத்தப்பட்டு, பின் கூடைகளில் புடைக்கப்பட்டு அரிசி பிரித்தெடுக்கப்பட்டது. இவ்வுத்திகளும் ஆப்பிரிக்க அடிமைகளே அறிமுகப்படுத்தினர். பின்னர் 1787 இல், நீரால் இயங்கும் அரிசி அரவை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு நெல் சாகுபடி நல்ல இலாபம் ஈட்டியது. 20ஆம் நூற்றாண்டில், அமெரிக்க உள்னாட்டு போருக்குப் பின் அடிமைகள் இல்லாமையால் நெல் சாகுபடி குறைந்து விட்டது.
 
=== சங்கப்பாடல்களில் ===
சங்க இலக்கியங்களில் நெல் பற்றிய பின்வரும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன:
* நன்செய் நிலத்தில் விளையும் நெல்லை வெண்ணெல் <ref>வெண்ணெல் அரிநர் தண்ணுமை மலைபடுகடாம் - அடி 471</ref> என்பர்.
* புன்செய் நிலத்தில் வானம் பார்த்த பயிராக விளைந்த நெல் ஐவன வெண்ணெல் <ref>கொடிச்சி ஐவன வெண்ணெல் குறூஉம் - குறுந்தொகை - 373</ref> எனப்படும். அண்மைக்காலம் வரையில் இதனைப் பச்சைமலைப் புனக்காட்டில் விளைவித்தனர்.
 
=== பண்டைய சேமிப்பு முறை மற்றும் நெற்களஞ்சியங்கள் ===
[[Fileபடிமம்:Palaivananathar.jpg|thumb|200px|திருப்பாலைத்துறையிலுள்ள தஞ்சை நாயக்க மன்னர் கால நெற்களஞ்சியம்]]
அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பாக சேமித்து வைக்க பெரிய மண் பானைகள், பத்தாயம் அல்லது குதிர் எனும் மரப்பலகைகளால் செய்யப்பட்ட அமைப்பு மற்றும் செங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட நெற்களஞ்சியங்கள் ஆகியவை பண்டைய நாட்களில் இருந்தன.<ref name="dinamanisunday">http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/2014/01/12/திருக்கோயில்-நெற்களஞ்சியங/article1996452.ece</ref>
 
600 ஆண்டு பழைமையான நெற்களஞ்சியங்கள் பல இந்துத் திருக்கோயில்களில் அமைந்துள்ளன. திருவரங்கம், திருஆனைக்கா, திருவரங்கம் கோயில்(திருக்கோயிலூர் அருகில்), அழகர்கோயில், தஞ்சாவூர், பாபநாசம், [[திருப்பாலைத்துறை|திருப்பாலத்துறை]] திருக்கோயில்களில் இத்தகைய நெற்களஞ்சியங்கள் உள்ளன.<ref name="dinamanisunday" />
 
== பாரம்பரிய நெல் வகைகள் ==
இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது. <ref>பசுமைப் புரட்சியின் கதை, சங்கீதா ஸ்ரீராம், பக்:50</ref>
 
=== தமிழக பாரம்பரிய நெல் வகைகள் ===
* வாடன் சம்பா
* முடுவு முழுங்கி
வரிசை 59:
* நெய் கிச்சி
 
=== பாரம்பரிய நெல் வகைகள் காக்கும் முயற்சிகள் ===
* [[நமது நெல்லைக் காப்போம்]] அமைப்பு [[பாரம்பரிய நெல்]] வகைகள் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆண்டு தோறும் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் [[நெல் திருவிழா]] நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 18 ஆயிரம் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் வகைகளை விநியோகித்துள்ளார்கள் என அறியப்படுகிறது.<ref>[http://tamil.thehindu.com/general/environment/பாரம்பரிய-நெல்லைக்-காக்கும்-கரங்கள்/article5574921.ece பாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்]</ref>
 
வரிசை 105:
|}
 
== நெல் சாகுபடி ==
[[படிமம்:A farmer.jpg|200px|thumb|right|நெல் வயலில் வேலை செய்யும் ஒரு விவசாயி]]
 
வரிசை 115:
 
== மண், தட்பவெப்பம் ==
=== விதைத்தல், நடுதல் ===
[[படிமம்:Ploughing.ogg|thumb|right|210px|நிகழ்படமாக, '''பரம்படித்தலைப்''' பாரீர்.]]
[[படிமம்:A grain paddy, tamil.jpg|thumb|right|150px|நெல்மணி]]
வரிசை 129:
 
=== நடவு வயல் தயாரிப்பு ===
நாற்றங்காலில் 3 - 4 வாரங்கள் வளர்ந்தபின் நாற்றுகள் பறிக்கப்பட்டு கட்டப்படுகின்றன. நாற்று வளர்ச்சியை பொறுத்து நாற்றாங்காலில் இருபது நாட்களிலிருந்து அதிகபட்சமாக 35 நாட்கள் வரை நாற்று வளர்க்கப்படுகிறது. இவை பின் சுமார் 5 செ.மீ நீர் தேங்கிய நடவு வயலில் நடப்படுகின்றன. நாற்றுக்கள் குறுவையில் 15 X 10 செ.மீ இடைவெளியும், தாளடியில் 20 X 10 செ.மீ இடைவெளியும் விட்டு நடப்படுகின்றன. ஒவ்வொரு முறை நீர் அளவு குறைந்து நிலம் தெரியும்போதும், நீர் பாய்ச்சி 5 செ. மீ நீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. தேவையான தழைச்சத்து பிரித்து உரமாக இடப்படுகிறது. நட்ட ஐந்தாம் நாள் களைக்கொல்லி உபயோகித்தோ அல்லது 15 ஆம் நாள் கைகளாலோ களைகள் நீக்கப்படுகின்றன. தமிழக கிராமப்புறங்களில் நடவுப்பணி காலத்தில் அதற்கென உள்ள மக்களால் நடவு மேற்கொள்ளப்படுகிறது. சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடவு இயந்திரங்கள் சில இடங்களில் நல்ல பயனை கொடுத்தாலும் பெரும்பாலான விவசாயிகள் நடவுப்பணிக்கு விவசயக்கூலிகளை வைத்தே நடவு மேற்கொள்கின்றனர். இயந்திரங்களின் பயன்பாடு தமிழகத்தில் இதுவரை பரவலாகவில்லை. தமிழகத்தின் சில மாவட்டங்களில் நடவு சமயத்தில் [[குலவை]] இட்டு நடவுப்பணிகளை தொடங்குவது வழக்கத்தில் உள்ளது.
 
== திருத்திய நெல் சாகுபடி ==
வரிசை 143:
நுகர்வோரைப் பொருத்தவரை நெல் இரகங்கள் பெரும்பாலும் அவற்றிலிருந்து கிடைக்கும் அரிசியின் வடிவத்தாலும், குணத்தினாலும் வகைப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, [[இந்தியா]]வில் நீளமான, மணமுடைய '[[பாஸ்மதி]]' அரிசி, நீளமான, சன்னமான 'பாட்னா' அரிசி, குட்டையான 'மசூரி' அரிசி ஆகிய இரகங்கள் பயிரிடப்படுகின்றன. [[தென்னிந்தியா]]வில், நீளமான சன்ன இரக 'பொன்னி' அரிசி பிரபலமானது. ஈரான் நாட்டில், ஹஷேமியுடனும் மிகவும் பிரபலமான நெல் இரகங்களை ஒன்றாகும்.<ref name="pazuki">{{cite journal |last=Pazuki |first=Arman |last2=Sohani |first2=Mehdi |lastauthoramp=yes |year=2013 |title= Phenotypic evaluation of scutellum-derived calluses in ‘Indica’ rice cultivars |url= http://aas.bf.uni-lj.si/september2013/08Pazuki.pdf |format=PDF |journal= Acta Agriculturae Slovenica |volume=101 |issue=2 |pages=239–247 |doi=10.2478/acas-2013-0020 |accessdate=February 2, 2014}}</ref>
 
=== புழுங்கல் அரிசி ===
தென் மற்றும் கிழக்கிந்தியாவில் அறுவடைக்குப்பின் நெல் நீரில் வேகவைத்து, உலர்த்தி, ஆலையில் அரைத்து அரிசியாக்கப்படுகிறது. இவ்வகை அரிசி 'புழுங்கல்' அரிசி என்று அழைக்கப்படுகிறது. கடின நெல் இரகங்களே இதற்கு உகந்தவை. புழுங்கல் அரிசி ஆலையில் தீட்டப்படும்போது, பல சத்துக்களை இழப்பதில்லை; எளிதில் செரிமாணம் ஆகக்கூடியது. ஆனால், வேக வைக்கப்பட்டதால், ஒரு வினோதமான வாசம் உடையதாய் இருக்கும். புழுங்கல் அரிசி தென்னிந்தியாவில் '[[இட்லி]]' தயாரிக்கவும், உழைக்கும் வர்க்கத்தினரால் உணவுக்கும் பயன் படுத்தப்படுகிறது.
 
=== பச்சரிசி ===
அறுவடையான நெல்லை,வேக வைக்காமல், நேரடியாக ஆலையில் அரைப்பதால் கிடைக்கும் அரிசியைப் பச்சரிசி என்பர்.இவ்வித அரிசியை விரும்பி உண்ணுவோரும் உண்டு. [[செரிமானம்|செறிமானத்திறனில்]] இடைஞ்சல் வருவதாகச் சொல்லி, பலர் உண்ணுவதில்லை.
 
=== மல்லிகை அரிசி ===
தாய்லாந்தின் 'மல்லிகை' அரிசி (Thai Jasmine rice) நீள அரிசி வகை ஆகும். இவ்வகை நீல அரிசியில் [[அமைலோபெக்டின்]] குறைவாக இருப்பதால், வேகவைக்கப்படும்போது, ஒட்டும் தன்மை குறைவாக இருக்கும். சீனாவிலும், ஜப்பானிலும் பெரும்பாலும், குட்டையான ஒட்டும் தன்மை அதிகமுள்ள அரிசி இரகங்களே பயன்படுத்தப்படுகின்றன. சீன உணவகங்களில் நீளமான சற்றே ஒட்டும் தன்மையுள்ள அரிசி பயன்படுத்தப்படுகிறது.
 
=== மணமுடைய அரிசி ===
மணமுடைய அரிசி இரகங்கள் இயற்கையாகவே ஒரே மாதிரியான மாறாத மணம் கொண்டவை. இந்திய இரகங்களான 'பாஸ்மதி', 'பாட்னா' ஆகிய இரகங்கள் உலக அளவில் குறிப்பிடத்தக்கவை. அமெரிக்காவில் 'டெக்ஸ்மதி' என்ற பெயரில் விற்கப்பட்ட ஒரு மண அரிசி இரகம் 'காப்புரிமை' சமப்ந்தமான ஒரு பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இது அமெரிக்க நீள அரிசியையும், பாஸ்மதியையும் கொண்டு உருவாக்கிய கலப்பின அரிசியாகும்.
 
வரிசை 161:
அரிசியில் உயிர்ச்சத்து ஏ சத்தை அதிகரிக்க பீட்டா-கரோட்டின் அதிகம் கொண்ட '[[தங்க அரிசி]]' என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் இரகம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு வருகிறது. ''இது தேவையான அளவு பீட்டா-கரோட்டினை தருமா? [[மரபணு மாற்றம் செய்த உணவுப்பொருட்கள்]] பாதுகாப்பானவை தானா?'' என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
 
== அடிக்குறிப்பு ==
{{Reflist}}
 
வரிசை 170:
[[பகுப்பு:நெல்| ]]
[[பகுப்பு:தமிழ் பொங்கல்]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
[[பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது