தொ. பரமசிவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
ஆவணப்படத்தின் முகவரியைச் சேர்.
வரிசை 1:
பேராசிரியர் '''தொ. பரமசிவன்''' (பிறப்பு: 1950) [[தமிழ்நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த ஒரு பண்பாட்டு ஆய்வாளர். பேராசிரியர் '''தொ. பரமசிவன்''' [[திருநெல்வேலி]] மாவட்டத்தில் உள்ள [[பாளையங்கோட்டை]]யில் வசித்து வருகிறார். தமிழில் இயங்கிவரும் முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர்களில் ஒருவர். [[பண்பாடு]], [[சமயம்|சமயங்கள்]] தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.<ref>[1 விடுபூக்கள்</ref> இவரைப் பற்றிய ஒரு [https://www.youtube.com/watch?v=WsyogTfPFks ஆவணப்படம்].
 
== இவரது நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தொ._பரமசிவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது