கணுக்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
}}
 
'''கணுக்காலிகள்''' (''Arthropod'') என்பவை [[விலங்கு|விலங்குகளின்]] பிரிவில் ஒரு மிகப் பெரிய தொகுதி. ஆறு கால்கள் கொண்ட [[பூச்சி]]களும் [[வண்டு]]களும், [[தேள்|தேளினங்களும்]], [[எட்டுக்கால் பூச்சி]], [[சிலந்தி]]களும், [[நண்டு]]களும் அடங்கிய மிகப் பெரிய உயிரினப்பகுப்பு. இன்று மனிதர்களால் அறிந்து விளக்கப்பட்ட விலங்குகளில் 80% க்கும் மேல் கணுக்காலிகளைப் பற்றியவைதாம். கணுக்காலிகளை அறிவியலில் ''ஆர்த்ரோபோடா'' (''Arthropoda'') என்பர். இது [[கிரேக்கம்|கிரேக்க]] மொழியில் உள்ள [[wikt:ἄρθρον|ἄρθρον]] ஆர்த்ரோ (= இணைக்கப்பட்ட, '''கணு''') என்னும் சொல்லும் [[wikt:ποδός|ποδός]] (''போடொஸ்'' = [[கால்]]) என்னும் சொல்லும் சேர்ந்து ஆக்கப்பட்டது. கணுக்காலிகளுக்குக் கடினமான [[புறவன்கூடு]] உண்டு. இவற்றின் உடல், பகுதி பகுதியாக, அதாவது கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள அமைப்பு கொண்டது. இவற்றின் கால்கள் இணை இணையாக ஒவ்வொரு உடற் கண்டத்திலும் உள்ளன. பிப்ரவரி 29, 2016 அன்று, 2013ல் தெற்குச் சீனாவில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 52 கோடி (520 மில்லியன்) ஆண்டுகள் பழமையான கணுக்காலியின் தொல்படிம மேட்டின் கூடுதல் படிமம் மற்றும் கள ஆய்வில் அதன் வயிற்றின் கீழ்பகுதியில் செல்லும் கயிறு போன்ற ஒன்று அதன் கீழ்நரம்பு வடம் என புரசீடிங்சு ஓப் நேச்சரல் அகாடமி ஆப் சயன்சசு இதழில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். <ref>https://www.sciencenews.org/article/fossil-reveals-ancient-arthropods-nervous-system</ref>
 
கணுக்காலிகளில் ''பிளாங்க்டன்'' (plankton) வகையைச் சேர்ந்தவையின் 0.25 மி.மீ அளவில் இருந்து, 20 [[கிலோ கிராம்]] எடையுடன் 4 [[மீட்டர்]] (12-13 [[அடி]]கள்) கால் விரிப்பு அகலம் கொண்ட மிகப்பெரிய [[நிப்பானிய எட்டுக்கால் நண்டு]] வரை மிகப்பல வகைகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/கணுக்காலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது