இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
[[தொலமி]] வரைந்த [[இலங்கை]] வரைபடத்தில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட அரேபியரின் வரலாற்றுத் தரவுகளைக் குறித்துள்ளார். இது ஐரோப்பியர்களின் குறிப்புகளையும், வரைபடத்தையும் பார்க்க காலத்தால் முற்பட்டதும், தொன்மையானதுமாகும். தொலமி இலங்கையிலுள்ள ஐந்து புராதன நதிகளின் பெயர்களைக் குறித்துள்ளார். இதில் மூன்று நதிகளின் பெயர்களை பிறநாட்டவர் பெயர்களுடன் தொடர்புறுத்தியுள்ளார். மகாவலி கங்கைக்கு பாஸிஸ் பலூஸியஸ் (பாரசீக நதி), தெதுரு ஒயாவுக்கு சோனா பலூஸியஸ் (அரேபியர் நதி), ஜின் கங்கைக்கு அஸனாக் பலூஸியஸ் (எதியோப்பிய நதி) என்று குறிப்பிட்டருக்கின்றார். அதேவேளை மகாவலி கங்கையின் படுக்கைகளில் இயக்கர்கள் வாழ்ந்தது பற்றி மகாவம்சம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ''" இலங்கையின் மத்தியில் மகாவலி நதிக்கரையோரத்தில் மூன்று ஜோயனா நீளமும் ஒரு ஜோயனா அகலமுமான மகாநாகா தோட்டம் அமைந்துள்ளது. (ஒரு ஜோயனா - ஏறத்தாள 10 மைல்கள்) இந்த மகாநாகா தோட்டத்தில் தீவு எங்கிலும் வாழ்கின்ற பிரதான இயக்கர்கள் குறித்த ஒரு நாளில் வந்து கூடுவது வழக்கம். அவர்கள் கூடியிருக்கும் வேளையில் மகாநாகா தோட்டத்திற்கு வருகை தர புத்தர் எண்ணினார்."'' <ref>மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் (2003) க.குணராசா, முதல் பதிப்பு, கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம், பக் 11</ref> தொலமியினது குறிப்புக்களிலிருந்தும், மகாவம்சத்தின் குறிப்புக்களிலிருந்தும் மகாவலி நதியின் கரைேயாரத்தில் பாரசீகர்கள் வாழ்ந்திருந்ததாகவும், இயக்கர்கள் வாழ்ந்திருந்ததாகவுமான இரண்டு விதமான முடிவுகளை நாம் எடுக்கலாம்.
 
கி்.மு.475-523 காலப்பகுதியில் [[அரசி ஷீபா]] [[சொலமன்]] மன்னனுக்கு அனுப்பிய பரிசுப் பொருட்களில் இலங்கைக்குரிய விசேட தன்மைகொண்ட உயர்ரக கனிப்பொருட்கள் இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். கி.மு. 4 ம் நூற்றாண்டளவில் தென் மேற்கு ஆசியாவின் பெரும் நிலப்பரப்பை ஆட்சி புரிந்த மாமன்னர் சொலமனுடைய ஆட்சிக்காலத்தில் அரசி ஷீபாவுக்கு இலங்கையின் பெறுமதியான இரத்தினக் கற்களும், முத்துக்களும் அன்பளிப்பாகக் கிடைத்தன என்ற வரலாற்றுச் சம்பவங்கள் சில அரபு நூல்களில் காணக் கிடைக்கின்றன. இது அக்காலப் பகுதியில் இலங்கை அரேபியரிடையே பிரபல்யம் பெற்றிருந்தமையைக் காட்டுகின்றது.<ref>இலங்கை முஸ்லிம்களின் வரலாறு-ஒரு அறிமுகம் (2012), ஸெயின் றவூப், சமூக விஞ்ஞானங்களுக்கான இப்னு கல்தூன் ஆய்வகம், கண்டி, பக்.12 </ref> மாமன்னர் சொலமனுடைய ஆட்சியின் போது எருசலத்திலுள்ள 'பைத்துல் முகத்தஸ்' என்னும் அல்அக்ஸா பள்ளிவாசலில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட சிவப்பு மாணிக்கக்கல் வைத்துக் கட்டப்படதாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன.<ref>அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள்-1992, முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அலுவலகம், கொழும்பு</ref>
[[File:DomeOfTheRock.jpg|thumb|DomeOfTheRock-Jerusalam]]
 
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_முஸ்லீம்களின்_பூர்வீகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது