ஆயிரத்தொரு இரவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Snnizam (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 46:
ஆயிரத்தொரு இரவுகளை அடிப்படையாக வைத்து பல திரைப்படங்கள், சித்திரக் கதைகள், நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் வெளி வந்துள்ளன. இவற்றில் முதன்மையானது 1921ல் வெளிவந்த ''Der müde Tod'' (பொறுமையிழந்த மரணம்) எனும் திரைப்படம் ஆகும். [[இடாய்ச்சு]] மற்றும் [[ஆங்கில மொழி]]யில் இது வெளியானது. இதைத் தொடர்ந்து 1924இல் ''தி தீஃப் ஆப் பாக்தாத்'' (பாக்தாத் திருடன்) எனும் திரைப்படம் [[ஹாலிவுட்|ஆலிவுட்டில்]] வெளியானது. இதன் வெற்றியை அடுத்து, பல திரைப்படங்கள் ஆயிரத்தொரு இரவுகளையோ அல்லது அதன் கதை மாந்தர்களையோ அடிப்படையாக கொண்டு பல மொழிகளிலும் எடுக்கப்பட்டன. 1992ல் [[வால்ட் டிஸ்னி கம்பனி|வால்ட் டிசினி நிறுவனம்]] வெளியிட்ட அலாவுதீன் எனும் [[இயங்குபடம்]] பெரும் வெற்றியடைந்தது.
 
[[தமிழ் நாடு|தமிழ் நாட்டை]] பொருத்தவரை ஆயிரத்தொரு இரவுகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் [[அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941 திரைப்படம்)|அலிபாபாவும் நாற்பது திருடர்களும்]] ஆகும். 1941இல் வெளிவந்த இந்தப் படத்தில் [[என். எஸ். கிருஷ்ணன்]], [[டி. ஏ. மதுரம்]] ஆகியோர் நடித்திருந்தனர். தொடர்ந்து அதே பெயரில் 1956இல் [[அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956 திரைப்படம்)|மற்றொரு திரைப்படம்]] எடுக்கப்பட்டது. [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம்.சிஜி. இராமச்சந்திரன்]] மற்றும் [[பானுமதி ராமகிருஷ்ணா|பானுமதி]] ஆகியோர் நடிப்பில் இது வெளிவந்தது. அதே போல 1957ல் அலாவுதீனும் அற்புத விளக்கும் எனும் திரைப்படம் ஏ. நாகேஸ்வரராவ் மற்றும் டி. எஸ். பாலையா நடிப்பில் வெளிவந்தது. பின்னர் அதே பெயரில் மற்றுமொரு படம் [[ரசினிகாந்து (நடிகர்)|இரசினிகாந்து]], [[கமலகாசன்]] நடிப்பில் 1979இல் வெளிவந்தது. இந்தத் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியிடப்பட்டதோடல்லாமல், பின்னர் தெலுங்கு மற்றும் இந்திக்கும் மொழிபெயர்க்கப்பட்டது. ஆயிரத்தொரு இரவுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தித் திரைப்படம் ''சிந்துபாத் அலிபாபா அவுர் அலாவுதீன்'' (சிந்துபாத் அலிபாபா மற்றும் அலாவுதீன்) ஆகும். 1965இல் இந்தத் திரைப்படம் வெளிவந்தது<ref>[http://memsaabstory.com/2009/07/26/sinbad-alibaba-aur-aladin-1965/ Sinbad Alibaba Aur Aladin (1965) Part 1 - memsaabstory.com]</ref>.
 
1993ல் சாகர் பிலிம்சு நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்ட ''அலிப் லைலா'' (ஆயிரம் இரவுகள்) எனும் தொடர், டிடி நேசனல் (தூதர்சன்) தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து எசு.ஏ.பி (SAB TV), ஏ.ஆர்.ஒய் (ARY Digital - பாக்கிசுத்தான்), பி டிவி (BTV - வங்காளதேசம்), ஈ டிவி (ETV - வங்காளதேசம்) ஆகிய தொலைக்காட்சி நிலையங்களிலும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் தினத்தந்தி நாளிதழில் 1960 முதல் கன்னித்தீவு எனும் சித்திரத் தொடர் வெளிவந்தது. இதுவும் ஆயிரத்தொரு இரவுகளை அடிப்படையாக கொண்ட ஒரு தொடரே ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஆயிரத்தொரு_இரவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது