மாரடைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 73 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 174:
== மருத்துவம் ==
வலி நீக்கல்
வலி பரிவு ''(sympathetic)'' [[நரம்பு மண்டலம்|நரம்பு மண்டலத்தைத்]] தூண்டி இதயத் துடிப்பை அதிகரிக்கும். இதனால் ஏற்கனவே செயல் இழந்த நிலையில் உள்ள இதயம் மேலும் செயலிழக்கும். எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றது இந்த வலி. எனவே வலியை உடனடியாகப் போக்க வேண்டும். சாதாரண வலி நீக்கிகள் எல்லாம் இந்த வலிக்கு பயன்படுத்தக் கூடாது. வலியைப் போக்க மார்ஃபின் சல்ஃபேட்டு 5 முதல் 10 மில்லிகிராம் சிரை வழியாய்த் தரப்பட வேண்டும். இதயத் திசு இறப்பால் பாதிக்கபட்டோருக்கு ஒரு போதும் தசையுள் ''(intra muscular)''மருந்து செலுத்தக் கூடாது. பின்னர் இரத்தக் கட்டி கரைப்பான்களைத் தரும் போது ஊசி போட்ட இடத்தில் இரத்தக் கசிவு ஏற்பட்டு வீங்கிக் கொள்ளும்.
மாரடைப்பு நோய் அறிகுறியுள்ள நோயாளிகள் அதிவிரைவில் போதிய வசதிகள் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டும். நோயாளியின் இதயத்துடிப்பு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படவேண்டும். ஏனெனில் மாரடைப்பு ஏற்பட்டு முதல் ஓரிரு மணி நேரத்தில் இதயம் தாறுமாறாக துடிக்கும் வாய்ப்பு உள்ளது. அச்சமயம் உடனடியாக மின்னதிர்வு சிகிச்சை அளிப்பதே உயிரைக்காக்க ஒரே வழியாகும்
 
மூச்சுத்திணறல் ஏற்பட்டால் நோயாளிக்கு ஆக்ஸிஜென் அளிக்கப்படவேண்டும்.
ஆஸ்பிரின் மாத்திரை 325 மிகி, குலோபிடோக்ரேல் மாத்திரை 300 மிகி மற்றும் ஸ்டேடின் மாத்திரை 80 மிகி அளிக்கப்படவேண்டும்.
 
கேத்தீட்டரைசேஷன் லேப் வசதிகள் உள்ள மருத்துவமனை அருகில் இருப்பின் பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டும். இம்முறையில் உடனடியாக ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டு, இதய அடைப்பு ஸ்டென்ட் பொருத்தி நீக்கப்படுகிறது.
 
கேத் லேப் வசதிகள் இல்லையெனில், இதய அடைப்பை கரைக்கக்கூடிய பைப்ரினோலைடிக்ஸ் மருந்து கொடுக்கப்படலாம்.
 
== ஆராய்ச்சி ==
"https://ta.wikipedia.org/wiki/மாரடைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது