"ஆடுதுறை ஆபத்சகாயேசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,732 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==இறைவன்,இறைவி==
இத்தலத்தின் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர், தாயார் பவளக்கொடியம்மை.
 
==தல வரலாறு==
கிஷ்கிந்தையின் அரசனாக விளங்கிய வாலி திறம்பட ஆட்சிசெய்து வந்தான். அரசுப் பணிகளுக்கு உதவியாகத் தன் தம்பி சுக்ரீவனையும் உடன்வைத்துக் கொண்டான். இந்நிலையில் வாலிக்கும் ஒரு மாயாவிக்கும் இடையே ஒருமுறை கடும் போர் நடந்தது. வாலியின் கரமே ஓங்கி இருந்தது. எனவே உயிர் தப்பிக்க நினைத்த மாயாவி ஒரு குகைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். அவனைத் துரத்திச் சென்ற வாலியும் ஆக்ரோஷத்துடன் அந்த குகைக்குள் நுழைந்தான். ஆனால் மாயாவி சிக்கவில்லை. அவனைக் கொல்லாமல் இங்கிருந்து நகரக் கூடாது என்று சபதம் எடுத்த வாலி மாயாவியின் வருகைக்காகக் குகைக்குள்ளேயே காத்திருந்தான். நாட்கள் சென்றன. குகைக்குள் போன வாலி இறந்து விட்டான் என்று எண்ணி சுக்கிரீவன் சோகமானான். அடுத்தகட்டமாக
அந்தக் குகையின் வாயிலை ஒரு பெரிய பாறாங்கல்லை கொண்டு மூடினான். பின் தானே ஆட்சிப்பொறுப்பேற்று மன்னன் ஆனான். பல நாட்கள் கழித்து குகைக்குள் தென்பட்ட மாயாவியை
வதம் செய்து அழித்த வாலி பெருமிதமாகக் குகைக்குள் இருந்து வெளிவர முயன்றான். முடியவில்லை. குகையின் வாயிலை மூடி இருந்த பெரிய பாறாங்கல்லைத் தகர்த்து எறிந்து வெளியே வந்தவனுக்கு அதிர்ச்சி. அரியணையில் சுக்ரீவன். சதிசெய்து தன்னை ஏமாற்றி விட்டு சுக்ரீவன் ஆட்சியில் அமர்ந்து விட்டான் என்று தவறாக எண்ணிய வாலி சுக்ரீவனை அடித்துவிரட்டி
மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். அடித்து துரத்தப்பட்ட சுக்ரீவன் எங்கெங்கோ சுற்றினான். இறுதியில் இந்தத் தென்குரங்காடுதுறை தலத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரரை வணங்கினான். இந்த ஈஸ்வரனின் அருள் பெற்றான். பின் ராமபிரானின் அன்பைப் பெற்று அவரது துணையுடன் எதிர்காலத்தில் கிஷ்கிந்தையின் அரசனானான். இழந்த சுகபோகங்களை மீட்டுத்தர இந்த ஈஸ்வரரை
வணங்கினால் அருள் புரிவார். அனைத்தையும் பெற்றுத்தருவார். ஸ்வாமியின் கருவறை அகழி அமைப்பை உடையது. வானரப்படையைச் சேர்ந்த சுக்ரீவனால் பூசிக்கப்பட்ட ஈஸ்வரன் என்பதால் இத்தலம் தென்குரங்காடுதுறை என அழைக்கப்படுகிறது. இதற்கேற்ற மாதிரி இங்கு சுக்கிரீவனுக்குத் தனி சந்நிதி இருக்கிறது.
 
==வழிபட்டோர்==
53

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2037769" இருந்து மீள்விக்கப்பட்டது