கருத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
 
=== கரு வளர்ச்சி நிலைகள் ===
[[படிமம்:HumanEmbryogenesis-ta.svg|thumb|மனித [[முளையம்|முளைய]] விருத்தியின் ஆரம்ப நிலைகள்]]
[[கருக்கட்டல்]] நிகழ்ந்த பின்னர், தோன்றும் [[கருவணு]]வானது கிட்டத்தட்ட 24-36 மணித்தியாலங்களில் [[இழையுருப்பிரிவு]] என்னும் [[கலப்பிரிவு]]க்குள்ளாகும். கலப்பிரிவின்போது, [[உயிரணு]]க்களின் எண்ணிக்கை விரைவாகவும், இரட்டிப்படைந்து கொண்டும் அதிகரித்துச் செல்லும். கிட்டத்தட்ட 70-100 [[உயிரணு]]க்களைக் கொண்ட நிலையில், இளம்கருவளர் பருவம் (Blastocyst) என அழைக்கப்படும். பொதுவாக கருக்கட்டல் நிகழ்ந்து 5 நாட்களில் இவ்வாறு அழைக்கப்படும். இந்நிலையில் இது மூன்று படலங்களைக் கொண்டிருக்கும். இவை புறப்படலம் (ectoderm), இடைப்படலம் (mesoderm), அகப்படலம் (endoderm) எனப்படும். வளர்ச்சியுற்ற நிலையில் புறப்படலம் [[தோல்]], [[நரம்புத் தொகுதி]]யையும், இடைப்படலம் [[தசை]], [[எலும்பு]]த் தொகுதியையும், அகப்படலம் [[சமிபாடு]], [[சுவாசத் தொகுதி]] போன்றவற்றையும் உருவாக்க வல்லன. கருப்பையை வந்தடையும் இளம் கருவளர் பருவமானது கருப்பைச் சுவரில் பதிந்து உறுதியாக இருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கருத்தரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது