மரவள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
[[படிமம்:Harvesting-manioc-Jaffna.JPG|thumb|250px|யாழ்ப்பாணத்தில் மரவள்ளிச் செடிகளைப் பிடுங்கிக் கிழங்கு எடுக்கும் காட்சி]]
ஆப்பிரிக்கக் கண்டத்து மக்களைப்போல் வேறெந்தக் கண்டத்து மக்களும் அதிகமாகக் கிழங்கு வகைகளில் தங்கியிருப்பதில்லை எனலாம். வெப்பவலய ஆப்பிரிக்காவில், மரவள்ளி முக்கிய உணவாக அல்லது முக்கியமான துணை உணவாகப் பயன்படுகின்றது. கானாவில், வேளாண்மைத்துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46% மரவள்ளியிலிருந்தும் பிற கிழங்கு வகைகளிலிருந்துமே கிடைக்கின்றது. கானாவில், நாளுக்குரிய கலோரி உள்ளெடுப்பின் 30% மரவள்ளிக் கிழங்கு மூலமே பெறப்படுவதுடன், ஏறத்தாழ எல்லா வேளாண் குடும்பங்களுமே மரவள்ளியைப் பயிர் செய்கின்றன.
 
==இந்தியா==
இந்தியாவில், 3.1 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்படுகிறது. 60 லட்சம் டன்கள் கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கு இந்தியாவின் 13 மாநிலங்களில் பயிரிடப்படுகிறது என்றாலும், தென்னிந்தியாவில் குறிப்பாக, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் அதிகமாகப் பயிராகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை, வளைகுடா நாடுகளின் பணப்புழக்கம், பொது விநியோக முறையின் மூலம் கிடைக்கும் தானியங்கள் மற்றும் சாகுபடி முறை ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
==பிற தொழில்கள்==
* மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச்,சவ்வரிசி குளுக்கோஸ்,டெக்ஸ்ட்ரின், கோந்து, புரூக்டோஸ் சாறு ஆகியவை தயாரிக்கும் தொழில்துறை சார்ந்த தொழிற்சாலைகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது. இந்த தொழில்துறைகளை "வளர்ச்சி துறைகள்" என வகைப்படுத்தலாம்.
 
==பயன்கள்==
=== உணவு ===
 
தோலுரித்த மரவள்ளிக் கிழங்கை வெறுமனே அவித்து உண்பது உலகின் பல பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படுகின்றது. இதனைத் துணைக் கறிகளுடன் ஒரு வேளை உணவாகப் பயன்படுத்துவதும் உண்டு. அவித்த கிழங்கை [[மிளகாய்]], [[உப்பு]] போன்ற பொருட்களுடன் சேர்த்து உரலில் இட்டு இடித்து உண்பதும் உண்டு. கிழங்கைக் குறுக்காக மெல்லிய சீவல்களாக வட்டம் வட்டமாகச் சீவி, எண்ணெயில் இட்டுப் பொரித்து உண்பதுண்டு. இது பொதுவாக சிற்றுண்டியாகவே பயன்படுகின்றது. இப் பொரியலைப் பல நாட்கள் வைத்து உண்ண முடியும் என்பதால், இவற்றை நெகிழிப் பைகளில் அடைத்து விற்பதுடன் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
 
===மரவள்ளிக் கிழங்கு-பொரிப்பு மற்றும் மாவு===
* கிழங்கு மாவு தயாரிக்கப்பட்டு அரிசி மாவிற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றது
 
</gallery>
 
{{கிழங்குகள்}}
 
[[பகுப்பு:கிழங்குகள்]]
22,065

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2040193" இருந்து மீள்விக்கப்பட்டது