வெண்ணிப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி அறுபட்ட கோப்பு நீக்கம்
வரிசை 1:
[[படிமம்:Sangath Tamil Gallery .jpg|thumb|350px|rihgt|புறப்புண் நாணிய புரவலன் - சேரமான் பெருஞ் சேரலாதன்]]
 
'''வெண்ணிப் போர்''' [[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கு]] 24 கி.மீ. தொலைவில் உள்ள [[வெண்ணிப் பறந்தலை]] என்னும் இடத்தில் நிகழ்ந்த போராகும். இப்போர் [[வெண்ணி]] ஊரின் வாயிலை அடுத்திருந்த வெளியில் நடைபெற்றது<ref>{{cite web | url=http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=293&pno=341 | title=பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் (தமிழ் இணையக் கல்விக்கழகம்) | accessdate=16 சூலை 2015}}</ref>. [[கரிகால் சோழன்]] தன்னை எதிர்த்து வந்த சேர மன்னன் [[சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதனையும்]], பாண்டிய மன்னன் ஒருவனையும், பதினொரு [[வேளிர் (தமிழகம்)|வேளிரையும்]] ஒருங்கே தோல்வியுறச் செய்தான். இப்போர் தமிழகத்து மன்னர்களின் மேலாண்மையைக் கரிகாலனுக்கு வழங்கியது. வெண்ணிப் போரில் தோல்வியுற்ற வேளிர் பதினொருவரில் உயிர் பிழைத்துத் தப்பிய ஒன்பதின்மர் வாகை என்னும் இடத்தில் கரிகால் சோழனை மீண்டும் போரில் எதிர் கொண்டனர். இப்போரிலும் கரிகால் சோழன் வெற்றி கொண்டான்<ref>{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a031/a0311/html/a0311554.htm | title=5.4 சோழ மன்னர்கள் (தமிழ் இணையக் கல்விக்கழகம்) | accessdate=16 சூலை 2015}}</ref>. வெண்ணிப் போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன் பெருஞ்சேரலாதன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி [[வடக்கிருத்தல்|வடக்கிருந்து]] உயிர் நீத்தான் என்பதை புலவர்கள், [[மாமூலனார்]]<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2014/02/09/சங்கப்பலகை-அகப்பாட்டில்-இள/article2046635.ece?service=print | title=சங்கப்பலகை: அகப்பாட்டில் இளம் வீரர்! | publisher=தினமணி | date=பிப்ரவரி 9, 2014 | accessdate=16 சூலை 2015}}</ref>, [[கழாத்தலையார்]]<ref>{{cite web | url=http://www.tamilvu.org/slet/l1281/l1281per.jsp?sno=65&file=l1281a16 | title=65. சேரமான் பெருஞ் சேரலாதன் (தமிழ் இணையக் கல்விக்கழகம்) | accessdate=16 சூலை 2015}}</ref>, [[வெண்ணிக் குயத்தியார்]]<ref>{{cite web | url=http://tamilnation.co/literature/ettuthokai/mp057.htm | title=புறநானூறு | publisher=மதுரைத் திட்டம் 2000 | accessdate=16 சூலை 2015 | author=கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்தவர்கள், Dr. K. Kalyanasundaram}}</ref> பாடல்களாகப் பாடியுள்ளார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/வெண்ணிப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது