என்றி டிரேப்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
என்றி டிரேப்பர், 1857ல், தனது 20 ஆவது வயதில் மருத்துவத்துக்கான நியூயார்க் பல்கலைக்கழகப் பள்ளியில் மருத்துவத்துக்கான பட்டம்பெற்று வெளியேறினார். முதலில், பெல்லெவு மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிந்தார். பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மருத்துவத்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். 1867ல் இவர் பணக்காரரான [[மேரி அன்னா பாமர்]] என்பவரை மணம் செய்துகொண்டார். டிரேப்பர் வானொளிப்படங்களைப் பயன்படுத்துவதில் ஒரு முன்னோடியாக விளங்கினார். 1872ல், உறிஞ்சர் கோடுகளைக் காட்டிய விண்மீன் நிறமாலை ஒளிப்படம் ஒன்றை எடுத்தார். இத்துறையில், யோசெப் புரோன்டோபர், லூயிசு மொரிசு ருதர்போர்ட், ஆஞ்செலோ செக்கி என்போர் இவருக்கு முன்னோடிகளாக இருந்தனர். ஆய்வில் ஈடுபடுவதற்காக 1873ல், நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் தனது பதவியைத் துறந்தார்.
 
இவர் 1874ல் வெள்ளி இடையோட்டத்தைப் ஒளிப்படம் எடுப்பதற்கான பயணம் ஒன்றை வழிநடத்திச் சென்றார். அத்துடன் முதன் முதலாக ஓரியன் விண்மீன் படலத்தை 1880 செப்டெம்பர் 30ம் தேதி ஒளிப்படம் எடுத்தார். தனது 11 அங்குல கிளார்க்கு பிரதர்சின் முறிவுத் தொலைநோக்கி மூலம் 50 நிமிடத் திறப்பு நிலையில் இப்படம் எடுக்கப்பட்டது. 1880 வியாழனின் நிறமாலையையும் இவர் ஒளிப்படம் எடுத்தார். மிகவும் விரும்பப்பட்ட நிலவின் படங்களை எடுப்பதற்குக் களமாக விளங்கிய டிரேப்பரின் வானாய்வகம் நியூயார்க்கின் ஆசுட்டிங்சு-ஆன்-அட்சனில் அமைந்திருந்தது. இன்று இக்கட்டிடம் ஆசுட்டிங்சு-ஆன்-அட்சன் வரலாற்றுக் கழகமாகச் செயற்பட்டு வருகிறது.
 
டிரேப்பர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். நியூயார்க் பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவ எல்.எல்.டி சட்டம் சார்ந்த பட்டத்தையும், விசுக்கோசின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் இருந்து, வெள்ளி இடையோட்டத்தைப் படம் எடுக்க ஐக்கிய அமெரிக்கக் குழுவின் பயணத்தை வழிநடத்தியமைக்காக 1882ல் அமெரிக்கச் சட்டமன்றப் பதக்கம் ஒன்றையும் பெற்றார். தேசிய அறிவியல்களுக்கான அக்கடமி, அசுட்ரோமினிசே கெசேசாஃப்ட்டு (Astronomische Gesellschaft) ஆகியவற்றுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவற்றுடன், அமெரிக்க ஒளிப்படவியல் கழகம், அமெரிக்க மெய்யியல் கழகம், கலைகளுக்கும் அறிவியல்களுக்குமான அமெரிக்க அக்கடமி, அறிவியல் முன்னேறத்துக்கான அமெரிக்கக் கழகம் ஆகியவற்றிலும் அவர் உறுப்பினராக இருந்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/என்றி_டிரேப்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது