"வோல்ட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

244 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
பக்க மேம்பாடு
சி ((GR) File renamed: File:Uri.jpgFile:Ohm's law triangle (VIR).jpg File renaming criterion #2: To change from a meaningless or ambiguous name to a name that describes what the image displays.)
(பக்க மேம்பாடு)
 
}}
 
'''வோல்ட்டு''' என்பது [[மின்னழுத்தம்|மின்னழுத்தத்தை]] அளக்கப் பயன்படும் ஒரு [[மின் அலகு]].<ref>{{cite web| url = http://www.bipm.org/en/si/si_brochure/chapter2/2-2/table3.html| title = SI Brochure, Table 3 (Section 2.2.2)| accessdate = 2007-07-29|year= 2006| publisher = BIPM}}</ref> இதன் குறியீடு (V). ஓர் (Ω) [[ஓம் (மின்னியல்)]] [[மின்தடை]]யுள்ள ஒன்றில் ஓர் [[ஆம்பியர்]] [[மின்னோட்டம்]] பாயத் தேவையான [[மின்னழுத்தம்]] என்பது ஒரு வோல்ட்டு. இன்னொரு விதமாகச் சொல்வதானால், ஓரு [[கூலம்]] [[மின்மம்]] ([[மின்னேற்பு]]), நகர்ந்து ஒரு [[ஜூல்]] அளவு [[வேலை]] (ஆற்றல்) செய்யப் பயன்படும் மின்னழுத்தம். வேறு ஒரு விதமாகக் கூறின் ஓர் ஓம் தடையுள்ள ஒன்றில் ஒரு [[வாட்]] அளவு [[மின்திறன்]] செலவாகப் பயன்படும் மின்னழுத்தம் ஒரு வோல்ட்டு ஆகும். இம் மின்னலகுக்கு இப்பெயரை இத்தாலிய மின்னியல் முன்னோடி அலெசான்றோ [[வோல்ட்டா]] அவர்களின் நினைவாக சூட்டப்பட்டது. இரவு வேளைகளில் அல்லது இருட்டான இடங்களில் பயன்படுதக் கையில் எடுத்துச் செல்லும் மின்னொளிக் குழலில் பயன்படும் [[மின்கலம்|மின்கலங்கள்]] ஓவ்வொன்றும் பெரும்பாலும் 1.5 V (வோல்ட்டு) அழுத்தம் தரவல்லது.
 
:<math>\mbox{V} = \dfrac{\mbox{kg} \cdot \mbox{m}^2}{\mbox{A} \cdot \mbox{s}^{3}}. </math>
[[File:Ohm's law triangle (VIR).jpg|thumb|மின் அளக்கும் அழகு]]
மின்னழுத்தத்தைத் மிகத் துல்லியமாக வரையறை செய்ய [[ஜோசப்சன் விளைவு]] என்னும் [[குவாண்ட்டம்]] நுண் இயற்பியலின் அடிப்படையில் வரையறை செய்துள்ளார்கள். இந்த ஜோசப்ப்சன் விளைவு (Josephson Effect) என்பது இரு [[மின் மீ்கடத்திகளின்]] (superconductors) இடையே ஒரு மிக மெல்லிய [[வன்கடத்தி]] (கடத்தாப்பொருள்) இருந்தால், அவ் வன்கடத்தியை ஊடுருவிப் பாயும் [[புழைமின்னோட்டம்]] (tunneling current) பற்றியதாகும். வோல்ட்டு அலகைத் துல்லியமாக நிறுவ அமெரிக்காவிலுள்ள [[NIST]] என்னும் நிறுவனம் ஜோசப்சன் விளைவு நிகழும் ஒரு [[நுண் ஒருங்கிணைப்புச் சுற்று]]ச் [[சில்லு]] செய்துள்ளது. NIST (National Institute of Standards and Technology) என்னும் நிறுவனம் தரம் நிறுவவும், தேறவும், அவைகளுக்குமான தொழில் நுட்பங்களை ஆயவும் நிறுவியதாகும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:மின்னியல் அலகுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2043914" இருந்து மீள்விக்கப்பட்டது