பறவைக் காய்ச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: பறவைக் காய்ச்சல் என்பது பொதுவாக, பறவைகளைத் தாக்குகின்ற ஒரு தொற்று நோ...
 
No edit summary
வரிசை 1:
பறவைக் காய்ச்சல் என்பது பொதுவாக, பறவைகளைத் தாக்குகின்ற ஒரு தொற்று நோயாகும். பறவைகளின் வயிற்றில் இந்த இன்புளுவன்சா வைரஸுக்கள் பொதுவாக இருந்தாலும், சில பறவைகளிடமே அவை வெளித்தெரியும் நோயாக உருவெடுக்கின்றன. வீட்டுப் பறவைகள் அல்லது வியாபார நோக்குடன் வளர்க்கப்படும் பறவைகளிடையே கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் வைரஸ் பரவுமாயின் அது வெளிக்காட்டும் வகையிலான தொற்றுநோயாக, வேகமாகப் பரவும்.
மேற்கூறிய பறவை சார்ந்த வைரஸுக்கள் மனிதரைப் பொதுவாகப் பாதிப்பதில்லையாயினும், 1997ம் ஆண்டிலிருத்து அவ்வாறான தொற்று பண்ணைவைத்திருப்போர் போன்ற பறவைகளுடன் நேரடித் தொடர்புடையர்களிற்குப் பரவத்தொடங்கியுள்ளது. 2003 ஆம் ஆண்டின் கடைசிப்பகுதியிலும் 2004 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் ஆசியாவில் H5N1 வைரஸினால் பாரிய அளவிலான பறவை/கோழிப்பண்ணைகள் பாதிக்கப்பட்டன. 2004ம் ஆண்டின் நடுப்பகுதியிலும் பாரியளவிலான தொற்றுகை ஆசியாவில் பண்ணைகளில் ஏற்பட்டன. கம்போடியா, சீனா, இந்தோனேசியா, யப்பான், லாவோஸ், தென்கொறியா, தாய்லாந்து, வியட்னாம், மலேசியா, துருக்கி, கஸகஸ்தான், மங்கோலியா, இரஷியா, ருமானியா ஆகிய நாடுகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன. 100 மில்லியனிற்கும் மேலான வளர்புப் பறவைகள் இத்தொற்றுகையைக் கட்டுப்படுத்துமுகமாக அழிக்கப்பட்டுள்ளன.
 
இன்புளுவன்சா வைரசுக்கள் இலகுவில் மாற்றமுறக்கூடியன. அதாவது இலகுவில் தமது அடிப்படை இழையுருக்களை மாற்றி வேறுவடிவை எடுக்கின்றன. இவ்வாறு மாற்றமுற்றுப் புதிதாக உருவாகும் வைரஸானது மனிதரிலிருத்து மனிதருக்குப் பரவும் தொற்றாக உருவாகுமானால் விரைவாகவும் கட்டுப்படுத்த முடியாத வகையிலும் பரவி மேற்குறிப்பிட்ட கொள்ளை அல்லது பண்டமிக்கை உருவாக்கும் என்பதே உ.சு.தா.தின் எச்சரிக்கையாக உள்ளது. வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாக வைத்து ஆராயும் போது ஒரு நூற்றாண்டில் மூன்று அல்லது நான்கு தடவைகள் புதியவகை வைரசினால் உருவாகும் இன்புளுவன்சா கொள்ளைகள் உலகை பாதிக்கின்றன.
 
==காய்ச்சலின் அறிகுறிகள்==
உடல் சூடாதல், உடல் பலவீனம், வலி,தொண்டை ப் புண், இருமல், கண் வருத்தம் (Fever, Muscle weakness and/or pain, Sore throat and cough, Sore eyes -conjunctivitis )
 
==இறப்பை ஏற்படுத்தும் காரணிகள்==
கடுமையான வைரஸ் நியூமோனியா, சுவாச அழுத்தம், பல அங்கங்கள் செயலிழப்பு (Severe viral pneumonia, Respiratory distress syndrome, Multi- organ failure)
 
==மருந்துகள், தடுப்பூசிகள்==
 
தமிஃபுளு (Tamiflu) எனப்படும் வைரசுக்கெதிரான மருந்தே தற்பொழுது பறவைக்காய்ச்சலைக் குணப்படுத்தப் பயன்படுகின்றது. இம்மருந்து மாற்றமடைந்து உருவாகப் போகும் வைரசிற்கு எதிராகவும் பயன்படும் என நம்பப்படுவதால் இம்மருந்தை பணக்கார நாடுகள் பெருமளவில் சேமிக்கத் தொடங்கியிள்ளன. இம்மருந்தின் உற்பத்திச்செலவு, அனுமதி விதிகள் ஆகியன அதிகமாகவும் இறுக்கமாகவும் உள்ளதால் மூன்றாம் உலக நாடுகள் போதியளவு கையிருப்பில் வைக்கமுடியாதுள்ளன. தமிஃபுளுவின் குணமாக்கும் திறமை, பக்கவிளைவுகள் போன்ற விதயங்களும் சில சமயங்களில் கேள்விக்குள்ளாகின்றன. தமிஃபுளுவிற்கு குறித்த வைரஸுக்கள் இயைபாக்கமடைகின்றனவா எனும் வினாவும் சில சமயங்களில் எழுந்துள்ளது.
 
உருவாகப் போகும் வைரசின் தன்மை, விளைவுகள் ஆகியவற்றைப் பொறுத்தே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. எனினும் உலகின் பல பாகங்களிலும் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான தயார்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல தடுப்பூசிகள் தற்போது பரீட்சாத்த நிலையில் உள்ளன. பாரியளவிலான உற்பத்திக்கு தற்போதய தடுப்பூசி தயாரிப்பு முறைகள், அவை சார்ந்த சட்டங்கள் அனுமதிப்பதில்லை. கம்பனிகளும் pandemic வருவதற்கு முன்னால் பாரியளவிலான உற்பத்தியை மேற்கொள்ள விரும்பவில்லை.
 
 
 
 
==வெளி இணைப்புகள்==
* http://www.canterburytamilsociety.org/thamilaruvi2006/birdflu.htm
* http://www.who.int/csr/disease/avian_influenza/country/en/index.html
"https://ta.wikipedia.org/wiki/பறவைக்_காய்ச்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது