மனித விலாக் கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki|Rib cage}} தமிழாக்கம்
 
வரிசை 24:
}}
'''விலாக்கூடு''' (''rib cage'') அனைத்து [[முதுகெலும்பி]]களின் (விலக்கு:லேம்ப்ரே எனப்படும் மஞ்சள் புழு) [[மார்பு]] பகுதி [[எலும்பு]]களின் கட்டமைப்பாகும். [[முள்ளந்தண்டு நிரல்]], [[விலா எலும்பு]]கள், [[மார்புப் பட்டை யெலும்பு]]களால் உருவாகியுள்ள இந்த விலாக்கூட்டினுள் [[இதயம்|இதயமும்]] [[நுரையீரல்|நுரையீரல்களும்]] பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மனிதர்களில், விலாக்கூடு, அல்லது '''மார்புக் கூடு''' (''thoracic cage''), எலும்புகளாலும் [[குருத்தெலும்பு]]களாலும் ஆனது; இது [[நெஞ்சுக் குழி]]யைச் சூழ்ந்துள்ளது. [[மார்பு வளையம்|மார்பு வளையத்தைத்]] (தோள் வளையம்) தாங்கி [[மனித எலும்புக்கூடு|மனித எலும்புக் கூட்டின்]] கருவப் பகுதியாக விளங்குகின்றது. வழக்கமாக மனித விலாக்கூட்டில் 24 விலா எலும்புகளும் மார்புப் பட்டையெலும்பும் விலாக்கசியிழையமும் 12 மார்பு முள்ளெலும்புகளும் உள்ளன. தொடர்புடைய தசைநார்ப்பட்டை மற்றும் [[தசை]]களுடன் [[தோல்|தோலும்]] இணைந்த விலாக்கூடு [[மார்புச் சுவர்]] ஆகின்றது; இந்த மார்புச் சுவருடன் கழுத்து, மார்பகம், வயிற்றின் மேற்பாகம், முதுகு ஆகியவற்றின் தசைகள் இணைக்கப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு:உடற்கூற்றியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மனித_விலாக்_கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது