இராபர்ட்டு புரூசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 30:
 
'''முதலாம் இராபர்ட்டு''' (''Robert I'', 11 சூலை 1274 – 7 சூன் 1329), பரவலாக '''இராபர்ட்டு புரூசு''' (''Robert the Bruce'', பண்டைய கேலிக்: ''Roibert a Briuis''; [[சுகாத்திசு கேலிக்கு|தற்கால இசுக்காத்திய கேலிக்]]: ''Raibeart Bruis''; நார்மன் பிரான்சியம்: ''Robert de Brus'' அல்லது ''Robert de Bruys'') 1306இலிருந்து 1329இல் தனது மரணம் வரை [[இசுக்கொட்லாந்து|இசுகாத்திய]] அரசராக இருந்தவர். அவரது [[தலைமுறை]]யில் மிகச் சிறந்த போர்வீரராகத் திகழ்ந்த இராபர்ட்டு [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்திற்கு]] எதிரான முதல் விடுதலைப் போரை நடத்தியவர். இசுக்கொட்லாந்து ஓர் தன்னாட்சி பெற்ற நாடாக மீட்பதற்கு போராடி வெற்றி கண்டார்; இன்றும் இவர் இசுக்கொட்லாந்தின் தேசிய நாயகராக கருதப்படுகின்றார்.
== இளமை வாழ்க்கை ==
 
இராபர்ட்டு புரூசு டர்ன்பெரி கோட்டையில் சூலை 11, 1274இல் பிறந்தார்.<ref name="RMS9">Robert McNair Scott, ''Robert the Bruce; King of Scots'' (New York: Carroll & Graf Publishers, Inc., 1999), p. 9 ISBN 0-7867-0329-6</ref>ஆறாம் இராபர்ட் புரூசிற்கும் கார்ரிக் கோமகள் மர்ஜோரிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார்.<ref name="RMS9"/> இராபர்ட்டின் குடும்பம் [[பிரான்சு|பிரான்சிலிருந்து]] குடிபெயர்ந்தவர்கள். பிரான்சின் வடபகுதியில் உள்ள [[நார்மாண்டி]]யில் புரூசு என்றவிடத்திலிருந்து வந்தவர்கள்.<ref name="GWRS82">George Way; Romilly Squires, ''Scottish Clan & Family Encyclopedia'' (Glasgow: HarperCollins Publishers, 1994), p. 82 ISBN 0-00-470547-5</ref>1066இல் இதே பெயருடைய இவரது மூதாதை ஒருவர் [[இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்|முதலாம் வில்லியமுடன்]] இங்கிலாந்து வந்துள்ளார்.<ref name="GWRS82"/> மற்றுமொரு இராபர்ட்டு புரூசு இசுக்கொட்லாந்தின் முதலாம் டேவிடுடன் வந்துள்ளார்.<ref name="GWRS82"/>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
[[பகுப்பு:இசுக்காட்லாந்து அரசர்கள்]]
[[பகுப்பு:1274 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இராபர்ட்டு_புரூசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது