இராபர்ட்டு புரூசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
== இசுக்கொத்திய அரசர் ==
1306இல் ஜான் கோமின் என்பவரை தேவாலயமொன்றில் இராபர்ட்டு சந்தித்தார். இவரும் இசுக்கொட்லாந்திய அரசராக விரும்பியவர். இவர்களுக்கு இடையே எழுந்த சண்டையில் இராபர்ட்டு ஜானைக் கொன்றார்.<ref>Herbert Maxwell, ''Robert the Bruce and the Struggle for Scottish Independence'' (New York; London: G.P. Putnam's Sons, 1906), pp. 129-30</ref> இதனையடுத்து இராபர்ட்டு இசுக்கூன் என்றவிடத்திற்குச் சென்றார். இங்கு இங்கிலாந்து அரசருக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த இசுகொத்திய அரச அங்கிகளை இசுக்கொத்திய பிரபுக்கள் கொண்டுவந்தனர். இவர்கள் இராபர்ட்டை இசுகொட்லாந்தின் அரசராக முடிசூட்டினர்.<ref>John Barbour; John Pinkerton, ''The Bruce: Or, The History of Robert I. King of Scotland'', Vol. 1 (London: Printed by H. Hughs, for G. Nicol, bookseller to His Majesty, 1790), p. 42</ref>
 
இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து இசுக்கொட்லாந்தை விடுவிக்க இராபர்ட்டு பல போர்களை நடத்தினார். முதலாம் எட்வர்டு அரசருடனும் பின்னர் அவரது மகன் இரண்டாம் எட்வர்டு அரசருடனும் சண்டைகள் புரிந்தார். 1314இல் பன்னோக்பர்ன் சண்டையில் இராபர்ட்டின் படைகள் இரண்டாம் எட்வர்டின் படைகளை வெற்றி கண்டனர்.<ref>Alan Young; Michael J. Stead, ''In the Footsteps of Robert the Bruce'' (Stroud: Sutton Publishing Limited, 1999), pp. 6, 124 ISBN 0-7509-1910-8</ref>
 
1315இல் இராபர்ட்டு புரூசு தனது படைகளை [[அயர்லாந்து|அயர்லாந்திற்கு]] அனுப்பினார்.<ref name="RMS173-74">Robert McNair Scott, ''Robert the Bruce; King of Scots'' (New York: Carroll & Graf Publishers, Inc., 1999), pp. 173-74</ref> இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்த அயர்லாந்தை வென்று தமது சகோதரர் எட்வர்டு புரூசை 1316இல் அயர்லாந்தின் அரசராக்கினார்.<ref name="RMS173-74"/> இசுக்கொட்லாந்து படையினருக்கும் அயர்லாந்து மக்களுக்கும் சண்டைகள் எழுந்தவண்ணம் இருந்தன. 1318இல் எட்வர்டு புரூசு கொல்லப்பட்டதுடன் இசுகொட்லாந்து அயர்லாந்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டது.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இராபர்ட்டு_புரூசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது