இராபர்ட்டு புரூசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
 
1315இல் இராபர்ட்டு புரூசு தனது படைகளை [[அயர்லாந்து|அயர்லாந்திற்கு]] அனுப்பினார்.<ref name="RMS173-74">Robert McNair Scott, ''Robert the Bruce; King of Scots'' (New York: Carroll & Graf Publishers, Inc., 1999), pp. 173-74</ref> இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்த அயர்லாந்தை வென்று தமது சகோதரர் எட்வர்டு புரூசை 1316இல் அயர்லாந்தின் அரசராக்கினார்.<ref name="RMS173-74"/> இசுக்கொட்லாந்து படையினருக்கும் அயர்லாந்து மக்களுக்கும் சண்டைகள் எழுந்தவண்ணம் இருந்தன. 1318இல் எட்வர்டு புரூசு கொல்லப்பட்டதுடன் இசுகொட்லாந்து அயர்லாந்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டது.
==மரபுடைமை==
சூன் 7, 1329இல் இராபர்ட்டு புரூசு இறந்தார்.<ref name="JDM78">J. D. Mackie, ''A History of Scotland'', Second Edition, ed. Bruce Lenman; Geoffrey Parker (London; New York: Penguin Books Ltd., 1991), p. 78 ISBN 0-7867-0329-6</ref> போரிடுவதிலேயே கழிந்த தமது வாழ்நாளுக்கு மீட்பாக [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்களில்]] கலந்துகொள்ள விரும்பினார். தன்னால் இதனை நிறைவேற்ற முடியவில்லை என்ற நிலையில் தமது நம்பிக்கைக்குரிய நண்பர் சேர் ஜேம்ஸ் டக்ளசிடம் தனது இதயத்தை ஓர் சிறிய வெள்ளிப் பெட்டகத்தில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டினார்.<ref>Michael Brown, ''The Black Douglases'' (Scotland: Tuckwell Press, 1998), p. 27</ref> ஜேம்ஸ் டக்ளசு இராபர்ட்டின் இறுதி விருப்பதை நிறைவேற்றும் பொருட்டு இதயத்தை எடுத்துக்கொண்டு பல போர்வீரர்களுடன் புறப்பட்டார்.<ref name="RMS226-8">Robert McNair Scott, ''Robert the Bruce; King of Scots'' (New York: Carroll & Graf Publishers, Inc., 1999), pp. 226-28</ref> ஆனால் எசுப்பானியாவில் நடந்த சண்டையில் சர் ஜேம்ஸ் கொல்லப்பட்டார். இராபர்ட்டின் இதயம் இசுக்கொட்லாந்திற்கே திரும்பியது. இராபர்ட்டு புரூசின் உடல் டன்பெர்ம்லைன் மடத்தில் புதைக்கப்பட்டது; அவரது இதயம் மெர்லோசு மடத்தில் புதைக்கப்பட்டது.<ref name="RMS226-8"/>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இராபர்ட்டு_புரூசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது