நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை''' என்பது, நடு-அமெரிக்காவைச் சேர்ந்த [[கொல...
 
No edit summary
வரிசை 1:
'''நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை''' என்பது, [[நடு-அமெரிக்கா]]வைச் சேர்ந்த [[கொலம்பசுக்கு முற்பட்ட காலம்|கொலம்பசுக்கு முற்பட்ட]] பண்பாடுகள் மற்றும் நாகரிகங்களுடைய [[கட்டிடக்கலை]] மரபுகளினது தொகுதியைக் குறிக்கும். இக் கட்டிடக்கலை மரபுகள், பொதுக் கட்டிடங்கள், நகர்ப்புறக் கட்டிடங்கள் மற்றும் அமைப்புக்கள் வாயிலாக அறியப்படுகின்றன. நடு-அமெரிக்கக் கட்டிடக்கலையின் சிறப்பு அம்சங்கள் பல்வேறுபட்ட பிரதேச மற்றும் வரலாற்றுப் [[பாணி]]களைத் தழுவியவையாக இருப்பினும் அவை ஒன்றுக்கொன்று குறிப்பிடத்தக்க அளவு தொடர்புகளைக் கொண்டவையாக உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளாக நடு-அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியைச் சேர்ந்த பண்பாடுகளுக்கு இடையே நடைபெற்றுவந்த பண்பாட்டுப் பரிமாற்றங்கள் காரணமாக இப் பாணிகள் பல வரலாற்றுக் கட்டங்களூடாக வளர்ச்சியடைந்து வந்துள்ளன. நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை, பெரும்பாலும் அதன் பிரமிட்டுகளுக்காகவே அறியப்படுகின்றது.
 
 
நடு-அமெரிக்காவில், அண்டவியல், சமயம், புவியியல், கட்டிடக்கலை என்பவற்றுக்கு இடையிலான தொடர்புகள் பற்றிப் பரந்த அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. நடு-அமெரிக்கக் கட்டிடக்கலையின் இயல்புகள் பல சமயம் மற்றும் தொன்மவியல் எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக இவ்வாய்வுகளிற் பல எடுத்துக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, ந-டு அமெரிக்க நகரங்கள் பலவற்றின் தள அமைப்புகள், முதன்மைத் திசைகளையும், நடு-அமெரிக்கப் பண்பாட்டில் அவை கொண்டுள்ள தொன்மவியல் மற்றும் குறியீட்டுப் பொருள்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன.
 
 
நடு அமெரிக்கக் கட்டிடக்கலையின் இன்னொரு முக்கிய அம்சம் அதன் படிமவியல் ஆகும். நடு-அமெரிக்காவின் கட்டிடக்கலை, சமயம் மற்றும் பண்பாட்டுத் தொடர்புடைய சிற்பங்களால் அழகு செய்யப்பட்டிருப்பதுடன், பல வேளைகளில் அவற்றுடன்கூட [[நடு-அமெரிக்க எழுத்து முறைமைகள்|நடு-அமெரிக்க எழுத்து முறைமைகளிலான]] எழுத்துக்களையும் கொண்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/நடு-அமெரிக்கக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது