"பத்திரிசு லுமும்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
==சோவியத் ஆதரவு==
கட்டாங்கா மாகாணம் ஜூன் 1960 இல் மொயிஸ் த்சோம்பே தலைமையில் [[பெல்ஜியம்|பெல்ஜியத்தின்]] ஆதரவுடன் தனது விடுதலையை அறிவித்தது. [[ஐக்கிய நாடுகள்|ஐநா]] படைகள் வரவழைக்கப்பட்டன. இதனால் லுமும்பா [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] உதவியைக் கோரினார்.
 
==கைது==
[[Image:PatricelumumbaIISG.jpg|framepx|thumb|right|பத்திரிசு லுமும்பா]]
செப்டம்பர் 1960 இல் லுமும்பாவின் அரசு அதிபரினால் சட்டத்துக்கு மாறாக கலைக்க அறிவித்தார். மாற்றாக, லுமும்பா அதிபர் காசா-வுபுவின் பதவியைப் பறிக்க முயன்றார். [[செப்டம்பர் 14]], [[1960]] இல் [[சிஐஏ]]இன் ஆதரவுடன் இராணுவத் தளபதி ஜோசப் மோபுட்டு இராணுவப் புரட்சியை மேற்கொண்டு லுமும்பாவை அரசு பதவியில் இருந்து கலைத்தார்<ref name ="devlin">Larry Devlin, ''Chief of Station Congo'', 2007, Public Affairs, ISBN 1-58648-405-2</ref>. லுமும்பா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். [[ஐநா]] படைகள் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். வீட்டுக் காவலில் இருந்து தப்பித்த லுமும்பா ஸ்டான்லிவில் நோக்கி நீண்ட தூர பயணத்தை மேற்கொண்டார். ஆனாலும் மொபுட்டுவின் படையினரால் அவர் [[டிசம்பர் 1]], [[1960]] இல் போர்ட் ஃபிராங்கி என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். உள்ளூர் [[ஐநா]] அலுவலகத்திடம் அவர் முறையிட்ட போதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. [[கின்ஷாசா]] நகருக்கு கொண்டு செல்லப்பட்டார் லுமும்பா. இராணுவத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாகவும் வேறு பல குற்றச்சாட்டுக்கள் லுமும்பாவுக்கெதிராக சுமத்தப்பட்டன. [[ஐநா]] செயலர் [[டாக் ஹம்மர்ஷோல்ட்ஹமாஷெல்ட்]] சட்டத்தின் மூலம் மட்டுமே லுமும்பா விசாரிக்கப்படவேண்டும் என கொங்கோ அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார். [[சோவியத் ஒன்றியம்]] லுமும்பா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.
 
[[ஐநா]] பாதுகாப்புச் சபையில் லுமும்பாவிற்கு ஆதரவாக சோவியத் யூனியன் [[டிசம்பர் 14]], [[1960]] இல் கொண்டுவந்த தீர்மானம் 8-2 வாக்குகளால் தோற்றுப் போனது. ஐநா செயலருக்கு கொங்கோ விவகாரத்தில் அதிக அதிகாரம் அளிக்க மேலை நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை சோவியத் ஒன்றியம் தனது [[வீட்டோ]] பலத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது.
1,10,327

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/205281" இருந்து மீள்விக்கப்பட்டது