பூசாரிக் கைச்சிலம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி + குறிப்பிடத்தக்கமை வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{குறிப்பிடத்தக்கமை|date=ஏப்ரல் 2016}}
'''பூசாரிக் கைச் சிலம்பாட்டம்''' என்பது இரண்டு சிலம்புகளை வைத்துக்கொண்டு ஆடும் தமிழக நாட்டுப்புற ஆட்டமாகும். மாரியம்மன் திருவிழாக்களிலும், கிராமிய தேவதைகளின் முன்பும் இவ்வாட்டம் ஆடப்படுகிறது. 'சக்தி கரகம்' எடுத்து வரும்பொழுது மாரியம்மன் தாலாட்டுப் பாடல்களைப் பாடிக்கொண்டே இச்சிலம்பாட்டம் ஆடி வருவர். கையில் ''பூசாரிக் கைச்சிலம்பு'' என்ற இரண்டு [[வெண்கலம்|வெண்கலத்தால்]] செய்யப்பட்ட சிலம்பு இசைக்கருவியை வைத்து ஆட்டுவர். காலில் சதங்கையும் கட்டியிருப்பர். [[பம்பை]] இசைக்கும், [[தவில்]] [[நாதசுரம்|நாதசுர]] இசைக்கும் கூட இவர்கள் சிலம்பாட்டம் ஆடுகின்றனர். குருவின் துணையுடன் [[நையாண்டி மேளம்|நையாண்டி]], நடநையாண்டி போன்ற மெட்டுகளுக்கு ஏதுவாக ஆடுவர். சிலம்பின் ஒலியும், கால்களின் சதங்கை ஒலியும் நாட்டுப்புற பாடலின் இசையுடன் இணைந்து காண்பவரை ஈர்க்கும் தன்மையுடையது பூசாரி கைச் சிலம்பாட்டமாகும்.<ref> தமிழ் இசை மரபு பக்கம் 129</ref>
'''பூசாரிக் கைச்சிலம்பு''' என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் [[கிராமிய இசை]]க் கருவிகளில் ஒன்றாகும். இது நீண்டு வளைந்த வட்ட வடிவமான ஓர் [[அங்குலம்|அங்குல]] குறுக்களவுள்ள [[பித்தளை]] அல்லது [[வெண்கலம்|வெண்கல]]ச் சுருளினுள் சில [[உலோகம்|உலோகக்]] குண்டுகள் போடப்பட்டு இயங்கும் தாளக் கருவியாகும். கைச்சிலம்பை விரல்களில் ஏற்றி அசைத்து ஆட்டும் போது ''கலகல'' என்று சப்திக்கும் ஓசை கேட்க நன்றாக இருக்கும். மாரியம்மன் கோயில்களில் பூசாரிகள் கையிலேந்தி வழிபாட்டின் போது இசைப்பார்கள். கிராமியப்பாடல்களில் [[கைச்சிலம்புப் பாட்டு]] என்பது முக்கியமாகும். மாரியம்மன் [[தாலாட்டு]]ப் பாட்டை பூசாரிகள் இசைக்கும் போது மிக இலகுவாக கைச்சிலம்பை ஒலிக்கச் செய்வர்.
 
[[பகுப்பு:இசைக்கருவிகள்]]
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
{{தமிழர் ஆடற்கலை வடிவங்கள்}}
 
 
 
[[பகுப்பு:தமிழர் நாட்டுப்புறவியல்]]
[[பகுப்பு:தமிழர் ஆடற்கலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பூசாரிக்_கைச்சிலம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது