சியுசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

49 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
#வழிமாற்று [[சீயசு]]
{{Infobox deity
| type = கிரேக்கம்
பிறகு சியுசு தன் மகன் என அறிந்தவுடன் குரோனசு கோபத்துடன் தனது டைட்டன் படைகளை திரட்டிக் கொண்டு போர் செய்ய ஆயத்தமானான். ஆனால் கடல் டைடன் ஓசனசு போரில் சியுசிற்கு ஆதரவராக செல்கிறார். பிறகு சியுசு தன் சகோதரர்கள் மற்றும் பிற படையினருடன் சேர்ந்து டைட்டன்களை எதிர்த்து போர் புரிகிறார். தொடர்ந்து பத்தாண்டுகள் நடந்த இந்த போர் டைட்டானோமாச்சி என்று அழைக்கப்படுகிறது.
 
கையாவின் அரக்கப் பிள்ளைகளான கைகான்ட்சுகள், எகாடோஞ்சிர்கள் மற்றும் ஒற்றைக் கண்ணர்களான [[சைக்ளோப்சுகள்]] ஆகியோரை விடுவிப்பதற்காக சியுசு பாதாள நிழல் உலகமான டார்டரசுக்கு சென்றார். அங்கு காவலராக கேம்பே என்னும் அரக்கியை வீழ்த்தி அவர்களை விடுவித்தார். அதற்கு பரிசாக [[சைக்லோப்சுகள்சைக்ளோப்சுகள்]] சியுசிற்கு இடி ஆயுதத்தை வழங்கினர். பிறகு அவர்களின் உதவியுடன் சியுசு டைட்டன்களை வீழ்த்தினார். போரில் தோற்ற டைட்டன்கள் அனைவரும் டார்டரசுக்கு சென்றுவிட்டனர். அட்லசு என்ற டைட்டனுக்கு மட்டும் வானத்தை தாங்கும் தண்டனை கொடுக்கப்பட்டது. போர் முடிந்தவுடன் சியுசு தன் சகோதரர்களுடன் உலகை பகிர்ந்து கொண்டார். அதன்படி வானம் சியுசுக்கும், கடல் போசீடனுக்கும் பாதாளம் ஏட்சுக்கும் கிடைத்தது. பிறகு கடவுள்களின் அரசனாக முடிசூடிய சியுசு, தன் சகோதரி ஈராவை மணந்து கொண்டு அவரை கடவுள்களின் அரசியாக்கினார்.
 
பிறகு தன் டைட்டன் பிள்ளைகளை வீழ்த்திய சியுசின் மீது கையா கோபம் கொண்டார். தனது அரக்கப் பிள்ளைகளான டைஃபோன் மற்றும் எச்சிட்னாவை சியுசுடன் போரிட அனுப்பினார். போரில் டைஃபோனை வெற்றி கொண்ட சியுசு, அந்த அரக்கனை ஏட்னா மலைச்சிகரத்தின் கீழ் அடைத்து வைத்தார். ஆனால் எசிட்னா மற்றும் அவர் பிள்ளைகள் மேல் இரக்கம் கொண்டு சியுசு அவர்களை உயிருடன் விட்டுவிட்டார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2056880" இருந்து மீள்விக்கப்பட்டது