பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
பழந்தமிழ்க் குடியான [[அகமுடையார்|அகம்படியர்]] குடியில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக தோராயமாக [[1848 - 1850]] ஆம் ஆண்டு இராமேசுவரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். [[1866]] ஆம் [[ஆண்டு]] உள்ளூர் [[கிறித்தவம்|கிருத்துவப்]] [[பள்ளிக்கூடம்|பள்ளியில்]] பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் [[தமிழ் மொழி|தமிழ்]] கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்தர் சட்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் [[சண்முக கவசம்]] இயற்ற தூண்டுதலாக இருந்தது. சேது மாதவ அய்யர் என்பாரிடம் வடமொழியும் கற்கலானார்.
 
தமது 12,13 வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இவருடைய முதல் பாடல் ஆசுகவியாக உருவாகிய "கங்கையைச் சடையில் பறித்து" எனத் தொடங்குவது. அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் ’உபய அருணகிரிநாதர்’ என்ற பெயரும் பெற்றார்.<ref name="சுவாமிகள்">அமுதசுரபி தீபாவளி மலர் 2004; ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்; பக்கம் 150,151,152</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாம்பன்_குமரகுருதாச_சுவாமிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது