இயற்கை எல்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 1:
'''இயற்கை எல்லை''' (''natural border'') என்பது [[இறைமையுள்ள நாடு|இறைமையுள்ள நாடுகளுக்கிடையே]] அல்லது அவற்றின் மாநிலங்களுக்கிடையே [[ஆறு]]கள், [[மலைத் தொடர்]]கள், அல்லது [[பாலைவனம்|பாலைவனங்கள்]] போன்ற இயற்கையான புவியியல் அமைப்பால் எழும் [[எல்லைக்கோடு]] ஆகும். மேற்கத்திய பண்பாட்டில் [[இழான் இழாக்கு உரூசோ|உரூசோவின்]] ''இயற்கை'' கருத்துருக்களாலும் [[தேசியவாதம்|தேசியவாதக்]] கருத்துருக்களாலும் 17வது நூற்றாண்டில் "இயற்கையான எல்லைக்கோடுகளின் கோட்பாடு" உருவானது.<ref>{{Cite book|author=Dikshit, Ramesh Dutta|year=1999|title=Political Geography: the Spatiality of Politics|edition=3rd|publisher=McGraw-Hill|location=New Delhi|page=70|isbn=978-0-07-463578-0}}</ref> சீனாவில் இயற்கையோடிணைந்த கட்டுப்பாட்டு வலயங்கள் இதற்கு முன்னமேயே கடைபிடிக்கப்பட்டுள்ளன.<ref>See {{Cite book|author=Wheatley, Paul|year=1971|title=The Pivot of the Four Quarters: a preliminary enquiry into the origins and character of the ancient Chinese city |location=Chicago|publisher=Aldine Publishing|pages= 170&ndash;173|isbn=978-0-85224-174-5}}</ref>
 
இயற்கையோடிணைந்த எல்லைகள் [[போர் வியூகம்உத்தி|போர்களுக்கு]] மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன; இத்தகைய இயற்கை வரம்புகளை தாண்டுவது படையெடுக்கும் எதிரிகளின் [[தரைப்படை|காலாட்படைகளுக்கு]] தடங்கல்களை ஏற்படுத்துவதால் எல்லைகளைக் காப்பது [[படைத்துறை|படைத்துறைக்கு]] எளிதாகின்றது.
 
இயற்கையான எல்லைகளை எட்டும்வரை இராச்சியத்தை விரிவாக்கிக் கொண்டு செல்வது முந்தைய அரசர்களின் முதன்மை இலக்காக இருந்தது. காட்டாக [[உரோமைக் குடியரசு]]ம் பின்னர் [[உரோமைப் பேரரசு]]ம் தங்கள் ஆட்பகுதியை சில இயற்கை அரண்களை எட்டும் வரை தொடர்ந்தனர்: முதலாவதாக [[ஆல்ப்ஸ்]], பின்னர் [[ரைன் ஆறு]], [[தன்யூப் ஆறு]] மற்றும் [[சகாரா]] பாலைவனம். [[ஐரோப்பா]]வின் [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்காலத்திலிருந்து]] 19வது நூற்றாண்டு வரை, [[பிரான்சு]] தனது எல்லைகளை ஆல்ப்சு, [[பிரனீசு மலைத்தொடர்|பிரனீசு]], மற்றும் ரைன் ஆறு வரை விரிவாக்கி வந்தது.<ref>{{Cite book|author=Carlton, J. H. Hayes|year=1916|title=A Political and Social History of Modern Europe, volume 1|publisher= Macmillan|location=New york|page=119|oclc=2435786}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_எல்லை" இலிருந்து மீள்விக்கப்பட்டது