நிலைகொள் வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
இயற்கைக்கு எதிரான செயல்களை செய்வதை விட்டுவிட்டு, அதன் கூட இணைந்து அதைத் தொடர்ந்து கவனித்து வந்தால் நிச்சயமாக நமது பல பிரச்சினைக்களுக்குத் தீர்வு கிடைக்கும். உதாரணமாக, பூச்சிகளைக் கொல்ல நாம் [[பூச்சிக்கொல்லி|பூச்சிக்கொல்லியைப்]] பயன்படுத்தினோம். ஆனால் இயற்கையோ புதிது புதிதாக பூச்சிகளை நமக்கெதிராக உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. நாம் என்ன செய்திருக்க வேண்டும்? ஒரு பூச்சியைக் கொல்ல இன்னொரு பூச்சியைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதைத் தான் இயற்கை நமக்குக் கற்றுக் கொடுக்கும்.
===இயற்கையின் ஒவ்வொரு ஆற்றலையும சேமித்துப் பழக வேண்டும்பழகுதல்===
சூரிய வெளிச்சம், மழை, காற்று என இயற்கை நமக்கு பல செல்வங்களை அள்ளிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது, இவற்றில் தேவையானவற்றை எல்லாம் எவ்வாறு சேமிக்கக் கற்றுக்கொள்கிறோம் என்பதில் தான் நமது வெற்றி அடங்கியுள்ளது. உதாரணமாக நீரின் அருமை ஒவ்வொரு விவசாயிக்கும் தெரியும், ஆனால் நம்மில் எத்தனை பேர் மழை நீரை அறுவடை செய்கிறோம்? குறைந்தபட்சம் நம் மண்ணில் விழும் மழை நீரையாவது நாம் சேகரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
 
===மகசூலை முழுமையாகப் பயன்படுத்துதல்===
நம்மைப் பொறுத்தவரை மகசூல் என்பது நமக்குக்கிடைக்கும் விளைபொருள் மட்டுமே, அதாவது நெல் அறுவடையில் நமக்குக்கிடைக்கும் நெல் மணிகள் மட்டும் தான் மகசூல். வைக்கோலை நாம் கணக்கில் கொள்வதேயில்லை, நாம் பயிரிடும் பயிர்களின் அனைத்துப் பாகங்களையும் ஏதோவொரு வகையில் பயன்படுத்தி மகசூலாக மாற்ற வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/நிலைகொள்_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது