யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,898 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
==பின்னணி==
16 ஆம் நூற்றாண்டில் இந்துப் பெருங்கடற் பகுதியில் ஐரோப்பியரான போர்த்துக்கேயரின் செல்வாக்கு வளர்ச்சி பெற்றிருந்தது. வணிக நோக்கங்களுக்காக இப்பகுதிக்கு வந்த அவர்கள் இப்பகுதியில் இருந்த பல நாடுகளின் நிலப்பகுதிகளைக் கைப்பற்றி போர்த்துக்கேய மன்னரின் ஆட்சியின்கீழ் கொண்டுவந்தனர். யாழ்ப்பாண அரசு உட்பட்ட இலங்கையின் கரையோரப் பகுதிகளும் இவ்வாறு போர்த்துக்கேயரின் ஆட்சியின்கீழ் இருந்தன. அக்காலத்தில், பிறநாடுகளில் ஆதிக்கம் செலுத்திய கடல் வல்லரசுகளாக போர்த்துக்கலும், [[எசுப்பானியா]]வும் விளங்கின. பாப்பாண்டவரின் உதவியுடன் உருவான ஒப்பந்தமொன்றின்படி கத்தோலிக்க நாடுகளான போர்த்துக்கலும், எசுப்பானியாவும் உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் உரிமையைத் தமக்குள் பங்குபோட்டிருந்தன. இதனால் எசுப்பானியாவின் தலையீடு இன்றி இந்துப் பெருங்கடற் பகுதியில் போர்த்துக்கேயரால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது.
 
17 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய நாடுகளான [[இங்கிலாந்து]], [[ஒல்லாந்து]], [[பிரான்சு]] ஆகிய நாடுகள் வல்லரசுகளாக எழுச்சிபெற்றுவந்தன. இந்நாடுகள் கிறித்தவத்தின் கத்தோலிக்கப் பிரிவுக்கு எதிரான புரொட்டசுத்தாந்தப் பிரிவை ஆதரித்தமையால் பாப்பாண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. தொலைதூர வணிகத்துக்கான நிறுவனங்களை உருவாக்கிய இந்நாடுகள், இந்துப் பெருங்கடற் பகுதியிலும் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்தப் போட்டியிட்டன. இங்கிலாந்தும், ஒல்லாந்தும் இப்போட்டியில் பெருமளவு வெற்றிகண்டன. பத்தேவியா போன்ற இடங்களிலிருந்து போர்த்துக்கேயரை வெளியேற்றிய ஒல்லாந்தர். இலங்கையிலிருந்தும் போர்த்துக்கேயரை விரட்டிவிட்டுத் தமது ஆட்சியை ஏற்படுத்தினர். யாழ்ப்பாணம் 1958ல் ஒல்லாந்தர் வசமானது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2063385" இருந்து மீள்விக்கப்பட்டது