யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
 
==நிர்வாகம்==
யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் அதைத் தனியான அலகாகவே நிர்வாகம் செய்தது போலவே, ஒல்லாந்தரும் யாழ்ப்பாண அரசுக்கு உட்பட்டிருந்த பகுதிகளைத் தனியாகவே நிர்வாகம் செய்தனர். இலங்கைத் தீவில் அமைந்திருந்த ஒல்லாந்தரின் ஆட்சிப் பகுதிகள் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் என மூன்று பகுதிகளாக இருந்தன. இலங்கையிலிருந்த எல்லா ஒல்லாந்த ஆட்சிப் பகுதிகளும், பத்தேவியாவில்[[பத்தேவியா]]வில் இருந்து செயற்பட்ட [[ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின்கம்பனி]]யின் அதிகார பீடத்தினால் நியமிக்கப்பட்டு அதன் கீழ் இயங்கிய ஒரு தேசாதிபதியையும், மூத்த அலுவலர்களையும் உள்ளடக்கிய ஒரு சபையினால் நிர்வகிக்கப்பட்டது. இதன் தலைமையிடம் கொழும்பில் இருந்தது. யாழ்ப்பாணத்தின் படைத்துறை மற்றும் நிர்வாக அலுவல்களுக்குப் பொறுப்பாக ஒரு தளபதி நியமிக்கப்பட்டிருந்தார். இத் தளபதியின் கீழ் நிர்வாக அலுவல்களுக்குப் பொறுப்பாக [[திசாவை]] எனப்படும் அலுவலர்களும் அவர்களுக்குக் கீழ் துணைத் திசாவைகளும் இருந்தனர். இவர்கள் தவிர மேலும் பல உயர் அலுவலர்கள் தளபதியின் கீழ் பணியாற்றினர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணத்தில்_ஒல்லாந்தர்_ஆட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது