பி. எஸ். சரோஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பி.எஸ்.சரோஜா''' என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவரது பூர்வீகம் [[சேலம்]] ஆகும். இவர் 1929-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி பாலசுப்ரமணியம் – ராஜலட்சுமி இணையருக்கு [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பிறந்தார். சரோஜா பத்து மாதக் குழந்தையாக இருந்தபோது [[சென்னை]] [[ராயபுரம்|ராயபுரத்தில்]] குடியேறியது அவரது குடும்பம். சரோஜாவின் தாத்தா தேர்ந்த வயலின் ஆசிரியர். அம்மா வாய்ப்பாட்டில் வல்லவர். இசைக்குடும்பத்தின் தாக்கம் காரணமாக இசையின்பால் ஈர்க்கப்பட பி.எஸ். சரோஜா, அம்மாவிடம் வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டார். சிறுவயதிலேயே தெலுங்குக் கீர்த்தனைகள் பாடும் அளவுக்கு இசையில் தேறினார். பாடும் திறமையை வளர்த்துக்கொண்ட சரோஜா, அருகில் இருந்த ராயபுரம் புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
== சர்கஸ் பயிற்சி ==
சரோஜா ஒன்பது வயதுச் சிறுமியாக மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அந்தப் பள்ளி மைதானத்தில் முகாமிட்டிருந்தது ‘தமிழ்நாடு சர்க்கஸ்’. என்னும் சர்கஸ் குழு இது தமிழ்க் கலைஞர்களைக் கொண்டு தமிழ் முதலாளிகளால் தொடங்கப்பட்டிருந்தது ஆகும்
"https://ta.wikipedia.org/wiki/பி._எஸ்._சரோஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது