பி. எஸ். சரோஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
சரோஜா ஒன்பது வயதுச் சிறுமியாக இருந்த போது அவரது பள்ளி மைதானத்தில் ‘தமிழ்நாடு சர்க்கஸ்’ என்னும் [[வட்டரங்கு]]க் குழு முகாமிட்டிருந்தது. சரோஜாவும் ஆர்வத்தின் காரணமாக பள்ளிக்கூடத்துக்கு சரிவர போகாமல் அங்கேயே பல நாட்கள் ஒளிந்திருந்து சர்க்கஸ் பயிற்சிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். சர்க்கசுப் பயிற்சியாளர் டி. எம். நாமசிறீ என்பவர் சரோஜாவின் ஆர்வத்தைக் கண்டு அவளுக்குப் பயிற்சியளித்தார். நாமசிறீயிடம் சரோஜா முழுக் கலையையும் கற்றுக்கொண்டார். ஆனாலும், தனது 12வது அகவையில் சர்க்கஸ் அரங்கேற்றத்துக்காகக் காத்திருந்த நேரத்தில் ‘தமிழ்நாடு சர்க்கஸ் கம்பெனி’ மூடப்பட்டது.<ref name=இந்து/>
 
== திரைப்பட அறிமுகம்வாய்ப்பு ==
வட்டரங்கு நிறுவனம் மூடப்பட்டாலும் தனது மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சியளித்துவந்தார் நாமசிறீ. இந்த நேரத்தில் ராயபுரத்தில் [[ராசாசி]] கலந்துகொண்ட [[காங்கிரஸ்]] பொதுக்கூட்டத்தில் கூட்டம் தொடங்கும்முன் தனது மாணவர்களைச் சாகசங்கள் செய்துகாட்டச் செய்தார் ஆசிரியர். ராசாசி சாகச நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசினார். இந்தக் கூட்டத்துக்கு ராசாசியுடன் வந்திருந்த காங்கிரஸ் ஊழியரான தட்சிணாமூர்த்தி என்பவர் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிவந்தவர். இவர் சரோஜாவின் அழகையும் சாகசத் திறமையையும் கண்டு மாதம் 45 ரூபாய் சம்பளத்துக்கு சரோஜாவை ஜெமினி ஸ்டூடியோவில் சேர்த்துவிட்டார்.<ref name=இந்து/>
 
"https://ta.wikipedia.org/wiki/பி._எஸ்._சரோஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது