கோயம்புத்தூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைப்பு
வரிசை 25:
'''கோயம்புத்தூர் மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முப்பதிரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். பொருளாதாரத்திலும், தொழிற்றுறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. கோயம்புத்தூர் தமிழ் நாட்டில் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த ஒரு நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் துணி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான [[கோயம்புத்தூர்]] நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது சுருக்கமாக கோவை என்று அழைக்கப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றிப் பெறப்படும் குடிநீரும் மின்சாரமும் ஆகும்.
 
பழைமை வாய்ந்த [[கொங்கு நாடு|கொங்கு நாட்டின்]] ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் கோசர் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்தூர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் முற்காலச் சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது{{cn}}. இதனை [[இராஷ்டிரகூடர்|இராட்டிரகூடர்கள்]], [[சாளுக்கியர்|சாளுக்கியர்கள்]], [[பாண்டியர்|பாண்டியர்கள்]], [[போசளப் பேரரசு|ஹோசைளர்கள்]], [[விஜய நகரப் பேரரசு]] ஆகிய பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன.
 
== வரலாறு ==
கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பழங்குடிகளான [[இருளர்|இருளர்கள்]] முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9 ஆம் நூற்றாண்டில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்த போது அவர்கள் கோயம்புத்தூரைத் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தனர்{{cn}}. அவர்கள் [[கோனியம்மன் கோவில் | கோனியம்மன் கோவிலை]] மையமாகக் கொண்டு{{cn}} முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள், குறிப்பாக [[கோசர்|கோசர்கள்]] ஆண்டு வந்தனர். கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது{{cn}}.
 
1550 களில் மதுரையில் விசய நகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில் உருவெடுத்தனர். 1700 களில் [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்கர்களுக்கும்]] [[மைசூர் அரசு|மைசூர் மன்னர்களுக்குமிடையே]] கோயம்புத்தூரில் சண்டை நடைபெற்றது{{cn}}. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.
 
பழங்குடியினரின் ஆதிக்கம் இவ்விடத்தில் வெகு காலம் நீடிக்கவில்லை. [[இராட்டிரகூடர்]]களிடம் இப்பகுதி சில காலம் இருந்து பின்னர் [[இராஜராஜ சோழன்]] காலத்தில்{{cn}} [[சோழர்]] கைக்கு மாறியது. சோழ அரசு வீழ்ச்சி அடைந்த பின் கொங்கு நாடு [[சாளுக்கியர்]]களாலும் பின்னர் [[பாண்டியர்]]களாலும் ஆளப்பட்டது. பாண்டியர்களின் ஆட்சியில் உண்ணாட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்ட போது, [[டெல்லி சுல்தான்]] தலையிட்டதனால்{{cn}} இப்பகுதி [[மதுரை சுல்தான்|மதுரை சுல்தானின்]] கைக்கு மாறியது. இவர்களிடமிருந்து இப்பகுதியினை 1377-78 ஆம் ஆண்டு காலத்தில் [[விஜயநகரப்_பேரரசு|விஜய நகரப் பேரரசு]] கைப்பற்றியது{{cn}}. இதற்குப் பின் இப்பகுதியினை [[மதுரை நாயக்கர்கள்]] ஆண்டனர்{{cn}}.
"https://ta.wikipedia.org/wiki/கோயம்புத்தூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது