"இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14,341 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
merge
({{merge from|இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்}})
(merge)
{{merge from|இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்}}
{{unreferenced}}
{{Politics of Sri Lanka}}
'''இலங்கையின் உள்ளூராட்சி சபை''' (''Local government in Sri Lanka'') என்பது [[இலங்கை]]யின் [[இலங்கை அமைச்சரவை|அமைச்சரவை]], [[இலங்கையின் மாகாண சபை|மாகாண சபைகள்]] ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உள்ள ஆட்சி அமைப்பாகும். முன்னைய காலங்களில் இலங்கையில் மாநகரசபை, பட்டின சபை, கிராமசபை என்றவாறான உள்ளூராட்சி மன்றங்களே காணப்பட்டன. பின்னர் [[1987]] ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி இலங்கையில் 4 வகையான உள்ளூராட்சி சபைகள் நிறுவப்பட்டன. அவை:
* மாநகரசபைகள்
* நகரசபைகள்
* [[பிரதேச சபைகள் (இலங்கை)|பிரதேச சபை]]கள், மற்றும்
* கிராம அபிவிருத்தி சபைகள் என்பனவாகும்.
 
[[சனவரி 2011]] இன் படி இலங்கையில் 335 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றுள்,
* மாநகர சபைகளின் எண்ணிக்கை - 23
* நகர சபைகளின் எண்ணிக்கை - 41
* பிரதேச சபைகளின் எண்ணிக்கை - 271
இலங்கையில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை - 38259 ஆகும்.
 
'''இலங்கையில் உள்ளூராட்சி''' நீண்ட வரலாற்றையுடையது. [[இலங்கை]] வரலாற்று நூலான [[மகாவம்சம்]], உள்ளூர் நிர்வாகம் ''நாகர குட்டிக'' (Nagara Guttika) என அழைக்கப்படும் நகரத் தலைவர்களால் நடத்தப்பட்டதாகக் கூறுகிறது. இது தவிர ''கம்சபா'' என அழைக்கப்பட்டு வந்த கிராமச் சபைகளும் இருந்துள்ளன. கிராம நிர்வாகம் தொடர்பில் ஓரளவு அதிகாரம் கொண்ட கிராமத் தலைவர்களின் கீழ் அமைந்த இச் சபைகளுக்கு சிறிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைக் கையாளவும், தகராறுகளைத் தீர்த்துவைக்கவும் உரிமைகள் இருந்தன. அக்காலத்துக் கிராம சபைகள், முக்கியமாக [[வேளாண்மை]] தொடர்பான பொறுப்புக்களையே கவனித்து வந்ததுடன் அவை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை.
 
1980 ஆம் ஆண்டில் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் உருவாக்கப்பட்டபோது கிராமசபைகளுக்கு உரிய அதிகாரங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்குக் கையளிக்கப்பட்டன. அரசியல் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பல காரணங்களால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாமல் போனது. பின்னர் புதிய சீர்திருத்தங்களின் கீழ், [[பிரதேச சபைகள்]] அமைக்கப்பட்டன. இன்றைய உள்ளூராட்சி முறைமையில், மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் என்பன அடங்கியுள்ளன. 2006 ஆம் ஆண்டின் நிலவரப்படி, இலங்கையில், 14 மாநகரசபைகளும், 37 நகரசபைகளும், 258 பிரதேச சபைகளுமாக மொத்தம் 309 உள்ளூராட்சி அமைப்புக்கள் உள்ளன.
 
==கிராம அபிவிருத்தி சபைகள்==
இலங்கையில் காணப்படும் உள்ளூராட்சி அமைப்புக்களில் கிராம அபிவிருத்தி சபைகளுக்கான அங்கத்தவர் தெரிவு பொது மக்களின் வாக்கெடுப்பின் மூலமாக நடத்தப்படுவதில்லை. குறித்த கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகரால் நடத்தப்படும் கூட்டத்தில் இதன் அங்கத்தவர்கள் ஓராண்டுக்கொரு முறை தெரிவு செய்யப்படுவர்.
 
==ஏனைய அமைப்புகளுக்கான தேர்தல்கள்==
 
இலங்கையின் உள்ளூராட்சி சபைகளான மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை என்பவற்றிற்கான அங்கத்தவர் தெரிவானது மக்கள் வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இத்தெரிவான விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் பட்டியல் முறைக்கமைய தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இங்கு கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்திற்கிணங்க ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும். கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கைக்கு இணங்க அதிக விருப்புத் தெரிவு வாக்குகளைப் பெற்ற அபேட்சகர்கள் உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்படுவர்.
 
==பட்டியல் அங்கத்தவர் எண்ணிக்கை ==
1991ம் ஆண்டு மே 11ம் திகதி இலங்கையில் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலானது 1990ம் ஆண்டு 25ம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கிணங்க நடத்தப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலின்போது நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டியது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினூடாக அல்லது சுயேட்சைக் குழுவின் மூலமாகும்.
 
நியமனப் பத்திரம் தாக்கல் செய்கையில் குழுவின் அல்லது குழுக்கள் முன்வைக்கும் பட்டியிலின் எண்ணிக்கையானது தேர்தல் சட்டத்திற்கிணங்க அமைந்திருத்தல் வேண்டும். அதாவது குறித்த உள்ளூராட்சி சபைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கையை விட 1/3 மடங்கு அங்கத்தவர்களை மேலதிகமாகக் கொண்டதாக பட்டியல் அமைதல் வேண்டும். அதேநேரம் இத்தொகை 6 க்கு அதிகமாகாமல் அமைதல் அவசியமாகும்.
 
* உதாரணம்
:1) 12 அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமாயின் '''12 + (12இன் 1/3) 4 = 16'''
:2) 24 அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமாயின் '''24+06 = 30'''
 
''மேற்படி உதாரணம் 1ல் 1/3 வீதமான மேலதிகமான அங்கத்தவர்களும்,
உதாரணம் 2ல் மேலதிகமான 6 அங்கத்தவர்களும் கொண்டதாகப் பட்டியல் அமைக்கப்படுவதை அவதானித்தல் வேண்டும்.''
 
::மேலும் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்படுகையில் 40% க்குக் குறையாத இளைஞர்கள் வேட்பாளர்களாக உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பதும் முக்கியமான விடயமாகும். தாக்கல் செய்யப்பட்ட பட்டியல் தேர்தல் ஆணையாளரால் பரிசீலிக்கப்பட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள அபேட்சகர்களுக்கு சிங்கள அகரவரிசைக்கிணங்க இலக்கங்கள் வழங்கப்படும்.
 
==விருப்பத் தெரிவு வாக்குகள்==
விருப்பத்தெரிவினை வழங்கும்போது ஒரே அபேட்சகர்களுக்கு 3 விருப்பத் தெரிவு வாக்குகளையும் அல்லது அபேட்சகர்களுக்குப் பிரித்துத் தமது விருப்பத் தெரிவுகளையும் வழங்க முடியும். (விருப்பத் தெரிவு கட்டாயமானதல்ல)
 
==வாக்குக் கணிப்பு==
வாக்குக் கணிப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
 
# கட்சிகள் அல்லது குழுக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளைக் கணித்து ஆசனங்களை ஒதுக்குதல்
# விருப்பத் தெரிவுகளைக் கணித்து அபேட்சகர்களைத் தீர்மானத்தல்.
 
==ஆசனங்களைப் பகிர்ந்தளித்தல்==
ஆசனங்களைப் பகிர்ந்தளிக்கும் முறையைப் பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
* ஆகக்கூடுதலான வாக்குகளைப் பெற்ற கட்சி அல்லது குழுவிற்கு இரண்டு போனஸ் ஆசனங்களை வழங்குதல்
 
==முடிவான எண்ணைக் கணித்தல்==
ஆசனங்களின் மொத்த எண்ணிக்கையிலிருந்து '2' ஐக் கழித்து செல்லுபடியான மொத்த வாக்குகளை வகுக்கும் போது பெறப்படுவதே முடிவான எண்ணாகும்.
 
* முடிவான எண்ணைக் கொண்டு கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற வாக்குகளைப் பிரித்து கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்
* இவ்வாறு பகிரப்பட்டபின் மேலும் ஆசனங்கள் எஞ்சியிருப்பின் மிகப் பெரும் மிகுதிக்கமைய அந்த ஆசனங்களை வழங்குதல்.
* இறுதியாக விருப்பத் தெரிவுகளின் அடிப்படையில் அங்கத்தவர்களைத் தீர்மானித்தல்
* இலங்கையில் மாநகர சபை, நகர, பிரதேச சபைகளுக்கான தேர்தலின்போது தற்போது இந்த வழிமுறையே பின்பற்றப்படுவது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமாகும்.
 
==உள்ளூராட்சி சபைகள்==
{{merge2011 from|இலங்கையின்இல் உள்ளூராட்சி சபைகள்}}:
 
{| class="wikitable" border="1" style="text-align:right;"
! align="left" style="background:#f0f0f0;"|'''[[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணம்]]''' !! align="center" style="background:#f0f0f0;"|'''மாநகர சபை''' !! align="center" style="background:#f0f0f0;"|'''நகர சபை''' !! align="center" style="background:#f0f0f0;"|'''பிரதேச சபை''' !! align="center" style="background:#f0f0f0;"|'''மொத்தம்'''
|-
| align=left|[[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணம்]]||4||6||33||43
|-
| align=left|[[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணம்]]||3||5||37||45
|-
| align=left|[[வடமத்திய மாகாணம், இலங்கை|வடமத்திய மாகாணம்]]||1||0||25||26
|-
| align=left|[[வடமேற்கு மாகாணம், இலங்கை|வடமேற்கு மாகாணம்]]||1||3||29||33
|-
| align=left|[[வட மாகாணம், இலங்கை|வட மாகாணம்]]||1||5||28||34
|-
| align=left|[[சபரகமுவா மாகாணம்|சபரகமுவ மாகாணம்]]||1||3||25||29
|-
| align=left|[[தெற்கு மாகாணம், இலங்கை|தெற்கு மாகாணம்]]||3||4||42||49
|-
| align=left|[[ஊவா மாகாணம்|ஊவா]]||2||1||25||28
|-
| align=left|[[மேற்கு மாகாணம், இலங்கை|மேற்கு மாகாணம்]]||7||14||27||48
|-
| align=left|'''மொத்தம்'''||'''23'''||'''41'''||'''271'''||'''335'''
|}
 
==வெளி இணைப்புகள்==
* [http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_2_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%2C_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%2C_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88 அரசறிவியல் பகுதி 2 (உள்ளூராட்சிமுறை, கட்சி முறை, வெளிநாட்டுக் கொள்கை)- புன்னியாமீன்]
{{இலங்கையில் தேர்தல்கள்}}
{{இலங்கையின் உள்ளூராட்சி}}
 
[[பகுப்பு:இலங்கை அரசியல்]]
[[பகுப்பு:இலங்கை உள்ளூராட்சி சபைகள்|*]]
55,782

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2068019" இருந்து மீள்விக்கப்பட்டது