நல்லூர் கந்தசுவாமி கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி image added
வரிசை 33:
| website = http://www.nalluran.com
}}
[[படிமம்:House of Temple car (chariot).jpg|thumb|நல்லூர் கந்தசுவாமி கோவிலில் உள்ள [[தேர்]] வீடு]]
'''நல்லூர் கந்தசுவாமி கோயில்''' [[இலங்கை]]யில் மிகவும் புகழ் பெற்ற [[இந்து]]க் [[கோயில்]]களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டில்]], [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகர]]த்திலிருந்து சுமார் இரண்டு [[மைல்]] தொலைவிலுள்ள [[நல்லூர்]] என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் [[12ம் நூற்றாண்டு]] தொடக்கம் [[17ம் நூற்றாண்டு|17ம் நூற்றாண்டின்]] முற்பகுதிவரை இருந்த [[யாழ்ப்பாண இராச்சியம்|யாழ்ப்பாண இராச்சிய]]த்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், [[யாழ்ப்பாண அரசு]] காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு [[கோயில்|கோயிலாக]] இருந்ததாக அறியப்படுகிறது.
 
== வரலாறு ==
'''நல்லூர் கந்தசுவாமி கோயில்''' [[இலங்கை]]யில் மிகவும் புகழ் பெற்ற [[இந்து]]க் [[கோயில்]]களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டில்]], [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகர]]த்திலிருந்து சுமார் இரண்டு [[மைல்]] தொலைவிலுள்ள [[நல்லூர்]] என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் [[12ம் நூற்றாண்டு]] தொடக்கம் [[17ம் நூற்றாண்டு|17ம் நூற்றாண்டின்]] முற்பகுதிவரை இருந்த [[யாழ்ப்பாண இராச்சியம்|யாழ்ப்பாண இராச்சிய]]த்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், [[யாழ்ப்பாண அரசு]] காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு [[கோயில்|கோயிலாக]] இருந்ததாக அறியப்படுகிறது.
 
==வரலாறு==
 
[[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] இராச்சியத்தை ஆண்ட [[ஆரியச் சக்கரவர்த்திகள்]] வம்சத்தின் முதலாவது அரசனான [[கூழங்கைச் சக்கரவர்த்தி]]யின் அமைச்சனொருவனான புவனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென [[யாழ்ப்பாண வைபவமாலை]] கூறுகிறது. இதற்கு ஆதாரமான பின்வரும் தனிப்பாடல், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் [[கைலாய மாலை]] என்னும் நூலின் இறுதியில் காணப்படுகின்றது.
 
{{cquote|இலக்கிய சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை<br />யலர்பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு<br />நலமிகுந்திடு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக்<br />குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே}}
 
ஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் ஆண்ட [[கோட்டே]] சிங்கள அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி எனும் பட்டத்தைக்கொண்ட [[புவனேகபாகு]] அல்லது ''புவனேகபாகு'' எனப்பெயர் கொண்டு கோட்டே அரசனான, [[செண்பகப் பெருமாள்]] என்பவனால் கட்டப்பட்டதென வேறு சிலர் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]]த்தில் உள்ள இக் கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது:
வரிசை 46:
{{cquote|சிறீமான் மஹாராஜாதி ராஜாய அகண்ட பூமண்டலப்ரதியதி கந்தர விஸ்வாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சோடச மஹாதான சூர்யகுல வம்ஸோத்பவ சிறீ சங்கபோதி புவனேகபாகு ஸமுஹா}}
 
திருவருள் பொருந்திய [[தெய்வயானை]]யுடனும், [[வள்ளி|வள்ளியம்மனு]]டனும்யம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற [[சுப்பிரமணியர்|சுப்பிரமணியரி]]ன் திருவடிகளை வணங்குபவனும், மன்னர்களுக்கு மன்னனும், மிகுந்த செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு... என்பது இதன் பொருள்.
 
முன்னரே சிறியதாக இருந்த [[கோயில்|கோயிலைத்]] தனது ஆட்சிக்காலத்தில் புவனேகவாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்பதே பொருத்தம் என்பது வேறுசிலர் கருத்து.
 
[[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவேயென்பது [[போத்துக்கீசர்|போத்துக்கீசருடைய]] குறிப்புக்களிலிருந்து தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான [[பிலிப்பே டி ஒலிவேரா]], [[1620]]ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய [[யாழ்ப்பாணக் கோட்டை|கோட்டை]] கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது. இது இருந்த இடத்தில் [[போத்துக்கீசர்]] சிறிய [[கத்தோலிக்க சமயம்|கத்தோலிக்க]] தேவாலயமொன்றை அமைத்ததாகத் தெரிகிறது. பின்னர் [[ஒல்லாந்தர்]] இதனைத் தாங்கள் சார்ந்த [[புரட்டஸ்தாந்த சமயம்|புரட்டஸ்தாந்த]] கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார்கள். இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட [[கிறிஸ்தவ சமயம்|கிறிஸ்தவ]] தேவாலயமே காணப்படுகின்றது.
 
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் ([[1658]] - [[1798]]1658–1798) இறுதி ஆண்டுகளில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது, நல்லூர் கந்தசுவாமி கோயில் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள்.
 
மடாலயம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த இவ்வாலயத்தை, ஆகமம் சார்ந்த கிரியை முறைக்கும், சிற்ப சாத்திர விதிக்கமைந்த கட்டட முறைக்கும் மாற்றியமைத்து, இன்றைய நிலைக்குக் கொண்டுவர வித்திட்டவர் [[ஆறுமுக நாவலர்]] ஆவார். அவரைத் தொடர்ந்து, அவரது மாணவர்கள் இவ்வாலய வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள்.
 
== ஆலய அமைப்பு ==
[[படிமம்:Nallur Panorama 2008.jpg|center|800px]]
இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் சிலாவிக்கிருகத்திற்குப் பதிலாக [[வேல்]] அமைக்கப்பட்டுள்ளது. இதனைச் சுற்றி [[பிள்ளையார்]] முதலான பரிவாரத் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வரிசை 76:
இக்காலத்தில் புராண படனம் செய்தல், சமயப் பிரசங்கம் செய்தல், திருமுறைகள் ஓதுதல், ஓதுவார்களை அழைப்பித்து ஓதுவித்தல் முதலான சமய நிகழ்ச்சிகள் மக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக நடத்தப்படுகின்றன.
 
== ஆலயம் பற்றிய நூல்கள் ==
 
* கூழங்கைத் தம்பிரான் பாடிய '''நல்லைக் கலிவெண்பா'''.
வரிசை 94:
* [[ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலரின்]] '''தனி நிலைச் செய்யுள்''' ஒன்று.
 
== வெளியிணைப்புகள் ==
{{Commons category|Nallur Kandaswamy temple|நல்லூர் கந்தசாமி கோவில்}}
*[http://www.nalluran.com/ நல்லூர் கந்தசுவாமி கோயில்]
*[http://www.nalluran.com/ நல்லூரான்]
*[http://www.nallurmurugan.info/ Nallur Murugan]
*[http://www.yarlmann.lk/head_view.asp?key_c=370 அலங்காரக் கந்தனின் தீர்த்த உற்சவம்!]
{{முருகன் கோயில்கள்|state=autocollapse}}
[[பகுப்பு:நல்லூரில் உள்ள கோயில்கள்]]
[[பகுப்பு:இலங்கையிலுள்ள முருகன் கோவில்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
"https://ta.wikipedia.org/wiki/நல்லூர்_கந்தசுவாமி_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது