சி. கணேசையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
== கல்வி ==
 
கணேசையரது குடும்பம் கற்றவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு விளங்கிற்று. இவருடய பெரிய தந்தையாரால் ஆயரக்கடவைச் சித்திவிநாயகர்முன்றலில் (சொந்த செலவில்) நடத்தப்பட்டுவந்த சைவப்பள்ளிக்கூடத்தில் ஐயர் எட்டாம் வகுப்புவரை கல்விகற்றார். இக்காலத்தில் இலக்கணம், இலக்கியம், சரித்திரம், சமயம், கணிதம் முதலிய பாடங்களில் முதன்மை பெற்றார். மேலும் இவரது பெரிய தந்தையாரிடமும் (வீட்டில்) தனிப்பட்ட முறையில் பாடங்கேட்டமை இவரை வகுப்பில் முதன்மாணவர் ஆக்கியது. அதன்பின் யாழப்பண நகரைச் சேர்ந்த [[வண்ணார்பண்ணை]]யில் வசித்து வந்த வித்துவ சிரோமணி [[ந. ச. பொன்னம்பலபிள்ளைபொன்னம்பல பிள்ளை]]யின் [[திண்ணை]]ப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து இலக்கணத்தில் உயர்கல்வி கற்றார்.
 
பொன்னமபலப்பிள்ளையவர்கள் இறந்தபின் [[சுன்னாகம்]] [[சுன்னாகம் குமாரசாமிப்புலவர்|அ. குமாரசுவாமிப் புலவரிடம்]] சிலகாலம் கற்றுவந்தார். அவர்களிடம் இலக்கணத்தோடு வடமொழி அறிவும் பெற்றார். மேலும் தனது சந்தேகங்களிலிருந்து தெளிவுறுவதற்கான உசாத்துயைணைவராகவும் பாவித்து புலமை பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சி._கணேசையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது