அமைதிப் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
== நில ஆராய்ச்சி ==
[[படிமம்:Pacific elevation.jpg|thumb|right|250px|அமைதிப் பெருங்கடலின் விளிம்பில் அமைதி நில ஓடு மோதுவதால் மிக நீளமான [[எரிமலை வளையம்]] கொண்டுள்ளது. பெருங்கடலுள் ஆழமான [[அகழி|அகழிகளையும்]] உடையதாகும்]]
[[ஆன்டிசைட் கோடு]] பகுதி அமைதிப் பெருங்கடலின் மற்ற நிலப்பகுதிகளிலிருந்து மிகவும் வேறுபட்டதும் மிக முக்கியமான ஒன்றுமாகும். இக்கோடு [[மத்திய அமைதிப் பெருங்கடற்படுக்கை]]யின் ஆழமான காரத்தன்மையுடைய [[எரிப்பாறை]]களை, பகுதி மூழ்கி இருக்கும் அமிலத்தன்மையான எரிப்பாறைகளிடமிருந்து பிரிக்கிறது. இக்கோடு [[கலிபோர்னிய தீவுகள்|கலிபோர்னிய தீவுகளின்]] மேற்கு எல்லைகளைப் பின்பற்றி, [[அலியூட்டியன் வளைவு|அலியூட்டியன் வளைவின்]] தெற்குப்பகுதி, [[கம்சாட்கா தீவக்குறை]]யின் கிழக்கு எல்லை, [[கூரில் தீவுகள்|குரில் தீவுகள்]], [[ஜப்பான்]], [[மரியானா தீவுகள்|மெரியானா தீவுகள்]], [[சாலமன் தீவுகள்]] மற்றும் [[நியுஸிலாந்து]] ஆகியவை வழியாக பயணிக்கிறது. இந்த வேறுபாடு மேலும் தொடர்ந்து வடகிழக்காக பயணித்து [[அல்பாட்ராஸ் கார்டிரேல்லா]]வின் மேற்கு எல்லை, [[தென் அமேரிக்கா]], [[மெக்ஸிகோ]] வழியாக சென்று பின்னர் [[கலிபோர்னியத் தீவு|கலிபோர்னியத் தீவுப்பகுதிக்கு]] திரும்புகிறது. [[ஆசியா]] மற்றும் [[ஆஸ்திரேலியா]]வின் கண்டத்துண்டுகளின் நீட்டல்களான, [[இந்தோனேசியா]], [[பிலிப்பைன்ஸ்]], [[ஜப்பான்]], [[நியூகினியா]], [[நியுஸிலாந்து]] ஆகியன இந்த [[ஆன்டிசைட் கோடு|ஆன்டிசைட் கோட்டின்]] வெளியில் இருக்கின்றன.
 
[[மத்திய அமைதிப் பெருங்கடற்படுக்கை]]யின் சிறப்பியல்புகளாக கருதப்படும் ஆழமான பள்ளங்கள், ஆழ்கடல் [[எரிமலை]]கள், கடலோர எரிமலைத் தீவுகள் ஆகிய அனைத்தும் பெரும்பாலும் இந்த ஆன்டிசைட் கோட்டின் மூடப்பட்ட வட்டத்தினுளேயே காணப்படுகின்றன. இப்பகுதிகளில் எரிமலைகளின் வெடிப்புகளிலிருந்து குழம்புகள் மெதுவாகப் பாய்ந்து பெரிய குடை-வடிவ எரிமலைகளைஉருவாகுகின்றன. இவைகளின் அழிக்கப்பட்ட சிகரப்பகுதிகள் அப்பகுதிகளில் [[வளை தீவுகள்|வளை தீவுகளாகவும்]], கூட்டங்கூட்டமாகவும் காணப்படுகின்றன. இவ்வான்டிசைட் கோட்டுக்கு வெளியே வெடித்து சிதறும் வகை எரிமலைகளே காணப்படுகின்றன. இப்பகுதியில் காணப்படும் [[எரிமலை வளையம்|அமைதிப் பெருங்கடல் எரிமலை வளையமே]] உலகின் வெடிப்பு எரிமலை மண்டலங்களில் மிகப்பெரியது.
"https://ta.wikipedia.org/wiki/அமைதிப்_பெருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது