அமைதிப் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
'''அமைதிப் பெருங்கடல்''' அல்லது '''பசிபிக் பெருங்கடல்''' (''Pacific Ocean'') உலகின் மிகப் பெரிய நீர்த் தொகுதியாகும். இதற்கு [[போர்த்துக்கல்|போர்த்துகேய]] நிலந்தேடு ஆய்வாளரான [[பெர்டினென்ட் மகலன்]] என்பவரால் "அமைதியான கடல்" என்ற பொருளில் இப்பெயர் வழங்கப்பட்டது. ஏறத்தாழ 18 [[கோடி]] சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ள [[பெருங்கடல்|இப்பெருங்கடல்]] [[உலகப் பரப்பு|உலகப் பரப்பில்]] மூன்றில் ஒரு பகுதியைச் சூழ்ந்து கொண்டுள்ளது. இது பூமியின் அனைத்துக் கண்டங்களின் கூட்டு நிலப்பரப்பை விட மிகப் பெரியதாகும்.
[[படிமம்:பசிபிக் பெருங்கடல்.jpg|thumb|அமைதிப் பெருங்கடல்]]
[[ஆர்க்டிக்]] பகுதியின் [[பெரிங் கடல்பெருங்கடல்|பெரிங்பெருங் கடலிலிருந்து]], [[அன்டார்டிகா]]வின் [[றாஸ்ராஸ் கடல்]] வரை ஏறத்தாழ 15,500 கி.மீ வட-தெற்காகவும், இந்தோனேசியா முதல் [[கொலம்பியா|கொலம்பியக் கடற்கரை]] மற்றும் [[பெரு]] வரை ஏறத்தாழ 19,800 கி.மீ கிழக்கு-மேற்காகவும் பரந்து கிடக்கும் இம்மாகடல் 5° வடக்கு [[அட்ச ரேகை]]யில் தனது கிழக்கு-மேற்கு உச்சகட்ட தூரத்தை அடைகிறது. [[மலாக்கா நீரிணைவு]] இதன் மேற்கத்திய எல்லையாக கருதப்பாடுகிறது. உலகின் மிக ஆழமான பகுதியான, 10,911 மீ ஆழமுடைய [[மெரியானாமரியானா அகழி]]யை இக்கடற் பகுதி உட்படுத்துகிறது. இக்கடலின் சராசரி ஆழம் 4,300 [[மீட்டர்|மீட்டராகும்]].
 
ஏறத்தாழ 2,500 [[தீவு]]களை இக்கடல் உட்படுத்துகிறது. இது மற்ற அனைத்து பெருங்கடல்களின் தீவுகளின் கூட்டு-எண்ணிக்கையை விட அதிகமாகும். பெரும்பான்மைத் தீவுகள் [[நில நடுக்கோடு|நிலநடுக்கோட்டின்]] தெற்கில் அமைந்துள்ளன. அமைதி பெருங்கடல் சுருங்கவும் [[அட்லாண்டிக் பெருங்கடல்]] விரிவடையவும் செய்துகொண்டிருக்க வாய்ப்பு உள்ளது என [[நில தட்டியல்]] கோட்பாடுகள் கூறுகின்றன. [[செலிபெஸ் கடல்]], [[கோரல் கடல்]], [[கிழக்கு சீனக்கடல்]], [[பிலிப்பைன் கடல்]], [[ஜப்பான் கடல்]], [[தென் சீனக்கடல்]], [[சுலு கடல்]], [[டாஸ்மான் கடல்]], [[மஞ்சள் கடல்]], ஆகியன அமைதிப் பெருங்கடலின் ஒழுங்கற்ற மேற்கோர எல்லைகளில் காணப்படும் முக்கியக் கடல்களாகும். [[மலாக்கா நீரிணைவு]] அமைதிப் பெருங்கடலை [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலுடன்]] மேற்கிலும், [[மாகெல்லன் நீரிணைவு]] இப்பெருங்கடலை அட்லாண்டிக் பெருங்கடலுடன் கிழக்கிலும் இணைக்கின்றன. வடக்கில் [[பெரிங் கடல்]] இப்பெருங்கடலை ஆர்டிக் பெருங்கடலுடன் இணைக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/அமைதிப்_பெருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது