அமெரிக்காக்களில் எசுப்பானிய குடியேற்றவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki}} தமிழாக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

00:27, 1 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

காஸ்தீல் முடியாட்சியின் கீழான குடியேற்ற விரிவாக்கம் எசுப்பானிய வெற்றியாளர்களால் முன்னெடுக்கப்பட்டது; பின்னர் நிர்வாகத்தினராலும் சமயச் பரப்புரையாளர்களாலும் மேம்படுத்தப்பட்டது. வணிகமும் முதற்குடிகளை சமய மாற்றத்திற்குள்ளாக்கி கத்தோலிக்கத்தை வளர்ப்பதும் குடியேற்ற விரிவாக்கத்திற்கான தூண்டுதல்களாக அமைந்தன.

எர்னான் கோட்டெஸ், பிரான்சிஸ்கோ பிசாரோ மற்றும் பிறர் பயன்படுத்திய காஸ்டில் மன்னரின் மணிமுடி தரித்த வெற்றியாளர்களின் எசுப்பானியக் கொடி.

1492இல் கொலம்பசின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து அடுத்த மூன்று நூற்றாண்டுகளில் எசுப்பானியப் பேரரசு கரிபியன் தீவுகள், தென் அமெரிக்காவில் பாதி, பெரும்பான்மையான நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் பெரும்பகுதியைக் (தற்கால மெக்சிக்கோ, ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா, தென்மேற்கு மற்றும் பசிபிக் கடலோரப் பகுதிகள்) கைப்பற்றியது.

19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எசுப்பானிய அமெரிக்க விடுதலைப் போர்களை அடுத்து அமெரிக்காக்களில் இருந்த, கியூபா, புவேர்ட்டோ ரிக்கோ தவிர்த்து பல எசுப்பானியக் குடியேற்றங்கள் விடுதலை பெற்றன. 1898இல் நடந்த எசுப்பானிய அமெரிக்கப் போரை அடுத்து இவையும் பசிபிக்கிலிருந்த குவாம், பிலிப்பீன்சுடன் எசுப்பானியாவிலிருந்து பிரிந்தன. இந்தக் கடைசி ஆட்பகுதிகளையும் இழந்த பிறகு எசுப்பானியாவின் அமெரிக்க குடியேற்றவாதம் முடிவிற்கு வந்தது.