மார்க்கோனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி image added
சி *திருத்தம்*
வரிசை 15:
}}
 
'''மார்க்கோனி'''எனப்படும் '''குலீல்மோ மார்க்கோனி''' (''Guglielmo Marconi''; [[ஏப்ரல் 25]], [[1874]] - [[ஜூலை 20]], [[1937]]) வால்வுகளுள்ள [[வானொலி]]யைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். ' [[கம்பியற்ற தகவல்தொடர்பு]] முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக [[1909]]-இல் [[இயற்பியல் நோபல் பரிசு|இயற்பியலுக்கான நோபல் பரிசை]] [[கார்ல் பெர்டினாண்ட் பிரவுன்]] உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.
 
== இளமை ==
மார்க்கோனி [[1874]] ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 இல் இத்தாலிய நாட்டில் பொலொனா நகரில் பிறந்தவர். தந்தை கைசப் மார்க்கோனி. தயார் ஆனி ஜேம்சன்-அயர்லாந்தைச் சேர்ந்தவர்.இவருடைய தந்தை ஓர் இத்தாலியப் பெருமகன். எனவே, மார்க்கோனி இளமையிலேயே வசதியான வாழ்க்கையைப் பெற்றார். போலக்னோ,புளோரன்ஸ், லெகார்ன் முதலிய ஊர்களில் தனிப்பட்ட முறையில் இவருடைய ஆரம்பக் கல்வி அமைந்தது.<br />
இளமைப் பருவத்தில் இவர்க்குப் ப்டிப்பில் ஆர்வம் மிகிதி. வீட்டிலேயே இருந்த நூல் நிலையத்தில் இருந்த அறிவியல் நூல்களைப் படித்தறிந்தார். வளர்ந்த பிறகும் இவர் பல்கலைக் கழகக் கல்வி எதனையும் பயிலவில்லை. இவருக்கு வீட்டிலேயே ஆசிரியர்கள் வந்து கல்வி கற்பித்தனர். இயற்பியலில் குறிப்பாக மின்சார இயலில் இவருக்கு அதிக நாட்டம் ஏற்பட்டது. 1905-ல் மார்க்கோனி ஓபிரெயின் என்பவரை மணந்தார். இவ்விணையருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர். ஒரு மகள் சில வாரங்களிலேயே இறந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் இருவரும் திருமண முறிவு செய்து கொண்டு பிரிந்தனர்.
 
== வானொலி வரலாறு ==
இவருடைய காலத்தில் மின்காந்த அலைகள் பற்றிய கருத்தை [[ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்]] என்ற அறிஞர் வெளியிட்டிருந்தார். அவற்றைப் பற்றி மேலும் ஆராய்ந்து [[ஹென்ரிச் ருடால்ப் ஹெர்ட்சு]] என்ற அறிஞர் ஆய்வுகளின் மூலம் அவற்றை உறுதிப் படுத்தினார்.<ref name="Story">{{cite book|last = Story| first = Alfred Thomas| title = A story of wireless telegraphy| publisher = New York, D. Appleton and Co.| date = 1904}}</ref><ref name="katz">{{citeweb|title=Heinrich Rudolf Hertz|url=http://chem.ch.huji.ac.il/~eugeniik/history/hertz.htm|publisher=chem.ch.huji.ac.il|accessdate=2008-03-16}}</ref> மின்காந்த அலைகளின் கொள்கைகளானது [[ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்]] மற்றும் மைக்கேல் ஃபாரடே ஆகியோரின் ஆராய்ச்சிகளின் மூலம் முன்பே பெறாப்பட்டிருந்தன. மின்காந்த அலைகளை அலைபரப்ப முடியும். மேலும் அவை வெளி முழுவதும் நேர்க்கோடுகளில் பயணிக்கின்றன என்பதையும், அவற்றை சோதனைக் கருவிகள் மூலமாக பெற முடியும் என்பதையும் ஹெர்ட்ஸ் செயல்முறை விளக்கமளித்தார்.<ref name="Story" /><ref name="katz" /> சோதனைகள் ஹெர்ட்ஸ் அவர்களால் பின்தொடரப்படவில்லை.
* இங்கிலாந்தில் [[ஆலிவர் லாட்ஜ்]] என்பவரும் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அவர் இதற்கான காப்புரிமையையும் பெற்றிருந்தார். ஆனால் அவ்வுரிமையை மார்க்கோனிக்கு விற்று விட்டார்.
* 1894-ல் இந்திய இயற்பியலாளர் [[ஜகதீஷ் சந்திர போஸ்]] கொல்கத்தாவில் மின்காந்த அலைகளைக் கொண்டு வானொலி பரப்பும் முறையைச் செய்து காட்டினார்.[[ஜகதீஷ் சந்திர போஸ்]] இந்தக் காலகட்டத்தில் முந்தைய கம்பியற்ற தகவல் கண்டறியும் சாதனத்தை உருவாக்கினார். மேலும் அவர் மில்லிமீட்டர் நீளமுள்ள மின்காந்த அலைகளைப் பற்றிய அறிவை அதிகரிக்க உதவினார்.<ref>ஜே.சி. போஸ், கலக்டேட் பிசிக்கல் பேப்பர்ஸ். நியூயார்க், N.Y.: லாங்மேன்ஸ், கிரீன் அண்ட் கோ., 1927</ref>. ஆனால் அதற்கான காப்புரிமையைப் பெறாததோடு அந்த ஆய்வை அவர் தொடரவில்லை. இந்த செய்தியை இங்கிலாந்திலிருந்து வெளிவரும் 'டெய்லி குரோனிகல்' என்ற ஆங்கில நாளிதழில் 1896-ல் செய்தியாக வெளியிட்டது.
* 1891-93-ல் [[நிக்கோலா தெஸ்லா]] என்ற அறிவியல் அறிஞர் வானொலி பற்றிய தன்னுடைய கண்டுபிடிப்பை உறுதி செய்து காப்புரிமை பெற்றார். தெஸ்லாவின் கம்பிச் சுருளை வைத்துதான் மார்க்கோனி ஆய்வுகளைச் செய்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அவர் என்னுடைய 17 காப்புரிமைக் கருவிகளைப் பயன்படுத்திதான் தன்னுடைய ஆய்வுகளைச் செய்தார் என்று தெஸ்லாவால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு முதன்முதல் வானொலியைக் கண்டுபிடித்தவர் தெஸ்லா என்ற தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால் மார்க்கோனி அதற்கு மேல் முறையீடு செய்து பல ஆண்டுகள் கழித்தே மார்க்கோனிக்கு ஏற்புடையதான தீர்ப்பு வழங்கப்பட்டது.
* 1894-ல் ஹெர்ட்சின் மறைவுக்குப் பிறகு போலக்னோ பல்கலைக் கழக இயற்பியல் பேராசிரியர் [[அகஸ்டோ ரைட்]] என்பவர் ஹெர்ட்சினுடைய ஆய்வுக்குறிப்புகளைக் கொண்டு மேலும் ஆய்வுகளில் ஈடுபட்டார். அப்போது அவருடன் சேர்ந்து அவருக்குத் துணையாக மார்க்கோனியும் அதில் ஈடுபட்டார்.
வரிசை 41:
[[வானொலி]] பரப்புவதைக் கணிதக் கலை வல்லுநர்கள் ஏற்றுக் கொள்ளவிலை. [[உலகம்]] உருண்டை வடிவமானது என்பதால் [[வானொலி]] பரப்பும் செய்தியும் நேராக நூறுமைல் வரைதான் செல்லும். உலக உருண்டையின் வளைவு காரணமாக அதற்கு மேல் பரவாது என்று கூறி மார்க்கோனியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட முற்பட்டனர். ஆனால் மார்க்கோனி அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் தன் பணியைத் தொடர்ந்தார்.
 
1900-ல் நெடுந்தூர செய்தி அனுப்பும் [[வானொலி]] நிலையத்தை உருவாக்கினார். 200 அடி உயரக் கம்பத்தை நட்டு அதில் வான்கம்பியை இணைத்தார். இயற்கை காரணமாக [[சூறாவளி]] வீசி கம்பத்தைச் சாய்தது. மார்க்கோனி உயரத்தைச் சற்று குறைத்து மற்றொரு கம்பத்தை நட்டு அட்லாண்டிக் பரப்பை தன் வானொலியால் இணைத்துக் காட்டினார். 12-12-1901-ல் 2100 மைல்களுக்கு [[அட்லாண்டிக்|அட்லாண்டிக்கின்]]கின் குறுக்கே கடந்து செய்தியை அனுப்பிப்பெற்றார். இச்செய்தியை உலகெங்கும் அறிவித்தார். இவர் பெருமை உலகெங்கும் பரவியது. [[1907]] இல் அவை இன்னும் சீர்ப்படுத்தப் பட்டு அட்லாண்டிக் தொலைத்தொடர்பு வழி எல்லோரது பொதுப் புழக்கத்திற்கும் பயன்பட்டது.
 
மேலும் பல ஆய்வுகள் செய்த மார்க்கோனி தொடர் [[அலைகள்]] உற்பத்திச் செய்யும் கருவியைக் கண்டுபிடித்து அதனைப் பயன்படுத்தினார். அதன் பயனாகப் பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பாலும் செய்தி அனுப்ப இயலும் என்பதை மெய்ப்பித்தார்.
வரிசை 49:
 
== சிறப்புகள் ==
* 1912-ல் ஒரு மோட்டார் விபத்தில் இவர் தன் வலது கண்ணை இழந்தார். எனினும் ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தினார்.
* 1914-ல் முதல் உலகப் போர் தோன்றியபோது இத்தாலி நாட்டின் தரை, கப்பற்படைகளில் வானொலியைப் பயன்படுத்திப் பணி புரிந்தார். அமெரிக்காவின் போர்க்குழு உறுப்பினராகத் தொண்டாற்றினார்.
முசோலினியை இவர் ஆதரித்து இத்தாலிய பாசிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.
* 1919-ல் போர் ஓலங்கள் குறைந்து அமைதி உருவானபோது, இவரின் பிறந்த நாட்டிற்காகப் ப்ல உடன்படிக்கைகளில் கையெழுத்துப் போடும் பெருமை இவருக்கு அளிக்கப்பட்டது. 1920-ல் முசோலினி இவருக்கு மார்க்விஸ் (Marquis) என்ற வழிவழியாக வரக்கூடிய பட்டத்தை அளித்தார்.
* 1930-ல் இத்ஹ்டாலிய ராயல் அகாதமியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் பிரிட்ஸ் (Britz) என்ற பதக்கம் அளித்து பெருமைப் படுத்தியது. இங்கிலாந்து விக்டோரியா பெருஞ்சிலுவையை வழங்கும் பெருமையை அடைந்தது.
* [[1937]]ஆம்1937ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் நாள் மார்க்கோனி காலமான போது உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.
 
== உசாத்துணை ==
{{Reflist}}
அறிவியல் ஒளி, ஏப்ரல் 2008 இதழ்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
வரிசை 63:
* [[நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்]]
* [[இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்]]
 
== மேற்கோள்கள் ==
<references>
 
{{இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் |state=autocollapse}}
"https://ta.wikipedia.org/wiki/மார்க்கோனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது